சுலபமா செய்யலாம் சுவையான வெண்டைக்காய் மோர்குழம்பு…!

மோர் குழம்பு சுவையான எளிமையான ரெசிபி ஆகும். சூடான சாதத்திற்கு மோர் குழம்புடன் அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வருவல் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இந்த வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது கடினம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் இதை சுலபமாக நாம் செய்ய முடியும். வாருங்கள் வெண்டைக்காய் மோர் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

விரத நாட்களில் வெண்டைக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்கள்…!

வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்வதற்கு முதலில் 50 கிராம் அளவு வெண்டைக்காய்களை அரை இன்ச் நீளத்திற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் இதனை வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு பல் பூண்டு, இரண்டுமேசை கரண்டி துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சீரகத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுலபமா செய்யலாம் சுவையான வெண்டைக்காய் பொரியல்.. இனி இப்படி செய்து பாருங்கள்…!

இப்பொழுது ஒரு பௌலில் இரண்டு கப் அளவு புளித்த தயிரினை எடுத்துக் கொள்ளவும். இந்த தயிரோடு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் முக்கால் ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களை சேர்த்து சிறிது நேரம் எண்ணெயில் வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மோரை இதனுடன் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை குறைந்த தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். மோர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கிவிடலாம் அவ்வளவுதான் அட்டகாசமான மோர்க்குழம்பு தயாராகி விட்டது.