ஈஸியா செய்யுங்க அருமையான சைட் டிஷ் மீல்மேக்கர் மசாலா…!

மீல் மேக்கர் என்று சொல்லக்கூடிய சோயா சங் சைவப் பிரியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மீல் மேக்கரில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இந்த மீல் மேக்கர் வைத்து செய்யும் ரெசிபிக்கள் அனைத்தும் சுவை நிறைந்ததாக இருக்கும். மீல்மேக்கர் வைத்து நாம் கிரேவி, குழம்பு, மசாலா என பல ரெசிபிகளை செய்யலாம். இப்பொழுது நாம் மீல்மேக்கர் வைத்து எப்படி சுவையான மீல் மேக்கர் மசாலா செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பிரியாணி சுவையை மிஞ்சும் அட்டகாசமான மீல்மேக்கர் வைத்து மீல் மேக்கர் பிரியாணி…!

மீல்மேக்கர் மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு மீல்மேக்கரை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் எடுத்து வைத்திருக்கும் மீல்மேக்கரை அதில் சேர்க்கவும். இது குறைந்தது 15 நிமிடங்கள் ஊற வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் நான்கு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கால் ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து எண்ணெயில் சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

சட்டுனு செய்யலாம் சத்துக்கள் நிறைந்த ராகி சூப்!

வெங்காயம் நன்கு வதங்கியதும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சீரகத்தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்கவும். காரத்திற்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய் தூள் சேர்க்கலாம். மசாலாக்கள் பச்சை வாசனை போக நன்கு வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பழுத்த தக்காளியை சேர்க்கவும். தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்? தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும் நாம் ஊறவைத்து வைத்திருக்கும் மீல்மேக்கரை தண்ணீரை பிழிந்து சேர்த்துக் கொள்ளவும். இந்த நிலையில் உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். மீல்மேக்கர் முழுவதும் மசாலாக்கள் படும்படி நன்கு கிளறி விடவும். இதை ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் அட்டகாசமான மீல்மேக்கர் மசாலா தயார்.