நாம் உண்ணும் உணவு சுவையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் பயன்படுத்தும் பொருட்கள் தரம் நிறைந்ததாக இருக்க வேண்டும். குறிப்பாக சமையலில் பயன்படுத்தும் காய்கறிகள் தரமானதாகவும் பிரெஷ் ஆனதாகவும் இருந்தால் செய்யும் சமையல் சுவையானதாக இருப்பது மட்டும் இன்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எப்பொழுதும் காய்கறிகள் வாங்கும் பொழுது சில டிப்ஸ்களை கவனத்தில் வைத்துக் கொண்டால் போதும் நல்ல தரமான காய்கறிகளை பார்த்து வாங்க முடியும்.
முருங்கைக்காய்:
முருங்கைக்காயை வாங்கும் பொழுது எப்பொழுதும் இளம் பச்சை நிறத்தில் இருக்கும் படி பார்த்து வாங்க வேண்டும். மேலும் முருங்கைக்காயை நம் கைகளால் லேசாக முறுக்கினால் முருங்கைக்காய் வளைய வேண்டும். இப்படி இருந்தால் முருங்கைக்காய் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
உருளைக்கிழங்கு:
கிழங்கு வகைகளை வாங்கும் பொழுது அதிக எடை உடையதாக பார்த்து வாங்க வேண்டும். அதேபோல் கைகளால் இதன் தோலை கீறினால் எளிதில் தோல் உரிய வேண்டும் இப்படி இருந்தால் அது நல்ல உருளைக் கிழங்கு.
கீரை கட்டு:
கீரை கட்டு வாங்கும் பொழுது அதன் இலைகள் நல்ல பிரஷ்ஷாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இலைகளோ தண்டுகளோ அழுகிய நிலையில் இருந்தால் அதனை வாங்க வேண்டாம்.
வெண்டைக்காய்:
வெண்டைக்காய் வாங்கும் பொழுது அதன் நுனிப்பகுதியை கைகளால் உடைத்தால் எளிதில் உடைய வேண்டும். இப்படி இருந்தால் அந்த வெண்டைக்காய் பிஞ்சு வெண்டைக்காய். சமையலுக்கு உகந்த காயாகும்.
கத்தரிக்காய்:
கத்தரிக்காயை வாங்கும் பொழுது அதன் தோல் மென்மையாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். முற்றல் கத்தரிக்காயில் தோல் கடினமாக இருக்கும். எனவே தோல் மென்மையாக இருந்தால் அது நல்ல கத்தரிக்காய்.