கான் போண்டா ஒரு சுவையான மாலை நேர ரெசிபியாகும். மொறுமொறுப்பான இந்த கான் போண்டா தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னி உடன் வைத்து சாப்பிட அத்தனை சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் சாதம் மீதம் ஆகி இருந்தால் அந்த சாதத்தை வைத்து சுவையான இந்த கான் போண்டாவை செய்யலாம். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு ஈசியாக சட்டென்று ஏதேனும் ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த கார்ன் போண்டாவை நீங்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். வாருங்கள் இந்த கார்ன் போண்டா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
வாவ்..! சத்தான காய்கறிகளை வைத்து சுவையான வெஜிடபிள் போண்டா…!
இந்த கான் போண்டா செய்வதற்கு மீதமான சாதத்தையோ அல்லது அப்பொழுது வடித்து ஆற வைத்த சாதத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் மிக்ஸியில் இரண்டு கப் அளவு சாதம் சேர்த்து ஒரு சுற்று மட்டும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த சாதத்துடன் ஒரு கப் அளவிற்கு வேகவைத்த சோளம் சேர்த்து அதையும் அரைத்துக் கொள்ளவும். அரைத்த சாதம் மற்றும் சோளத்தை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி இவற்றுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். 4 அல்லது 5 பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். முளைக்கீரையை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி அதையும் பொடியாக நறுக்கி ஒரு கப் அளவிற்கு எடுத்து நாம் அரைத்த சாதம் மற்றும் சோளத்துடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு மற்றும் 2 தேக்கரண்டி அளவிற்கு கான்பிளவர் மாவு எல்லாம் சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
மாவு அதிக தண்ணீராக இருக்கக் கூடாது. மாவை பிசைந்த பிறகு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். கடாயில் இந்த போண்டா பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை பொரித்து எடுக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை பொறிக்கவும். இதில் நாம் சேர்த்திருக்கும் சோளம், கீரை ஆகியவை குழந்தைகளின் உடலுக்கும் நல்லது. மேலும் சுவை நிறைந்ததாகவும் இருக்கும். அவ்வளவுதான் சூடான மொறுமொறுப்பான கான் போண்டா தயார்…!