முட்டை இருந்தால் ஒரு முறை இந்த கரண்டி ஆம்லெட் செய்து பாருங்கள்.. பிறகு உங்கள் வீட்டில் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள்…!

முட்டையை வைத்து நாம் பல்வேறு விதமான ரெசிபிகளை செய்ய முடியும். முட்டையை வைத்து செய்யும் ரெசிபிக்கள் சுவை நிறைந்ததாக இருக்கும். மேலும் முட்டை உடலுக்கு நன்மையும் தரக்கூடியது. இப்படி முட்டையை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் கரண்டி ஆம்லெட். இந்த கரண்டி ஆம்லெட் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடிய ரொம்ப சுலபமான ரெசிபி. வாருங்கள் இந்த கரண்டி ஆம்லெட்டை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

சூப்பரான சைட் டிஷ் புடலங்காய் முட்டை பொரியல்! சுலபமா இப்படி செஞ்சு பாருங்க…!

கரண்டி ஆம்லெட் செய்வதற்கு முதலில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த முட்டையை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். ஐந்து சின்ன வெங்காயத்தை பொடிபொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த முட்டை ஆம்லெட்டை நாம் தாளிக்கும் கரண்டியில் செய்தால் நன்றாக இருக்கும். தாளிக்கும் கரண்டியை எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் நாம் அடித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து கொள்ள வேண்டும். முட்டை ஒரு புறம் வெந்ததும் அதனை மறுபுறம் திருப்பி அதையும் வேக வைக்க வேண்டும். இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் இதனை எடுத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான கரண்டி ஆம்லெட் தயார்…!