வெண்டைக்காய் வழவழப்பு தன்மை நிறைந்த காயாகும். எனவே பலரும் இந்த காயை வைத்து செய்யும் ரெசிபிகளை விரும்பி சுவைக்க மாட்டார்கள். ஆனால் வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளது. எனவே சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயை வைத்து சுவையாக, வழவழப்பு தன்மை இல்லாமல் அட்டகாசமான ஒரு பொரியலை நாம் தயார் செய்ய முடியும். இந்த வெண்டைக்காய் பொரியல் அனைத்து வகையான சாதத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். வாருங்கள் சுவையான வெண்டைக்காய் பொரியல் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
விரத நாட்களில் வெண்டைக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்கள்…!
வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முதலில் 25 வெண்டைக்காய்களை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கழுவி ஒரு துணியால் துடைத்த விட வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் வெண்டைக்காய் முற்றலாக இல்லாமல் பிஞ்சாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்பொழுது அந்த வெண்டைக்காய்களை பெரிய துண்டுகளாக இல்லாமல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 12 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அதையும் மெல்லியதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொரிந்து உளுந்து நன்கு சிவந்ததும் இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கத் தொடங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
செட்டிநாட்டு ஸ்டைலில் அருமையான வெண்டைக்காய் மண்டி இப்படி செஞ்சு பாருங்க!
இவை வதங்கும் பொழுதே கால் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெண்டைக்காய் நன்கு வதங்கி சுருங்கி வரும் வரை வதக்கி விட வேண்டும். இறுதியாக இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் பொரியல் சுலபமாக தயாராகி விட்டது…!