வித்தியாசமாக முயற்சி செய்து பாருங்கள் காலை உணவுக்கு பாசிப்பருப்பு அடை!

தினமும் காலையில் ஒரே மாதிரியான டிபன் வகைகள் செய்து சாப்பிட சிலருக்கு அலுத்து விடும். அதற்காக புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம் என்று யோசிப்பது உண்டு. அப்படி புதிதாக ஏதேனும் டிபன் வகையை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் புரதச்சத்து நிறைந்த இந்த பாசிப்பருப்பு அடையை முயற்சித்துப் பார்க்கலாம். இந்த பாசிப்பருப்பு அடை அத்தனை சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது இந்த பாசிப்பருப்பு அடை. வழக்கமாக செய்யும் அடை போல் இல்லாமல் இந்த அடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாருங்கள் பாசிப்பருப்பு அடை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

பாசிப்பருப்பு அடை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பாசிப்பருப்பு, ஒரு கைப்பிடி பச்சரிசி, ஒரு கைப்பிடி உளுந்தம் பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவை நன்கு ஊறிய பிறகு இவற்றோடு ஒரு துண்டு இஞ்சி, 4 பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இதனை கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும்.

ஹோட்டல் சுவையில் பரோட்டா, சப்பாத்திக்கு அட்டகாசமான சிக்கன் சால்னா!

இதை அரைத்து எடுத்த பிறகு இவற்றோடு பொடி பொடியாக நறுக்கிய ஒரு கப் அளவு சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். மூன்று டேபிள் ஸ்பூன் அளவு துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, கறிவேப்பிலை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதிக தண்ணீராக இல்லாமல் இவற்றைக் கரைத்துக் கொள்ளவும். இப்பொழுது தோசைக்கல்லை காய வைத்து தோசை கல் காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை சற்று கனமாக தடவி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு சிவந்ததும் இதனை எடுத்துவிடலாம். நறுக்கிய வெங்காயம், தேங்காய் பூ, கொத்தமல்லியை மாவோடு சேர்க்காமல் இவற்றை தனியாக கலந்து வைத்து அரைத்த மாவை அடையாக ஊற்றி அடையின் மேல் தூவி வெந்ததும் பரிமாறலாம். அதுவும் நன்றாக இருக்கும் இந்த அடையை கார சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

சுலபமா செய்யலாம் அவல் வைத்து சுவையான அவல் தோசை…! செய்வது எப்படி?

அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு அடை தயாராகிவிட்டது…!