எச்சில் ஊறச் செய்யும் காரசாரமான ஆவக்காய் ஊறுகாய் இந்த முறையில் செய்து பாருங்கள்…!

ஆவக்காய் ஊறுகாய் என்பது மாங்காய் வைத்து செய்யும் ஒருவகை ஊறுகாய் ஆகும். இந்த ஆவக்காய் ஊறுகாய் காரசாரமான சுவை நிறைந்த ஊறுகாய். இது அனைத்து வகையான சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன். மேலும் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் இந்த காரசாரமான ஊறுகாய் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இந்த ஆவக்காய் ஊறுகாய் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

அடடே! எச்சில் ஊறச் செய்யும் எலுமிச்சை ஊறுகாய்.. அனைத்து சாதத்திற்கும் இது ஒன்று போதும்!

ஆவக்காய் ஊறுகாய் செய்வதற்கு சிறிய மாங்காய்களாக 15 மாங்காய்களை எடுத்துக் கொள்ளவும். கொஞ்சம் நார் உள்ள மாங்காயாக இருந்தால் இந்த ஊறுகாய் நன்றாக இருக்கும். மாங்காய்களை கழுவி துடைத்துக் கொள்ளவும். மாங்காயை அதில் உள்ள மாங்கொட்டை உடன் சேர்த்து பெரிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். அதில் உள்ள ஈரம் போக காய்ந்ததும் அதை எடுத்து வெயிலின் சூடு ஆறும் வரை வைத்து விடவும்.

பிறகு 200 கிராம் மிளகாய்த்தூள், 150 கிராம் கடுகு தூள், தேவையான அளவு உப்பு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இரண்டு கையளவு மாங்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்த தூளில் கொஞ்சமாக சேர்த்து குலுக்கி ஒரு ஜாடியில் போட வேண்டும். இதே போல் எல்லா மாங்காய் துண்டுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் கலந்து வைத்திருக்கும் தூளை சேர்த்து நன்கு குலுக்கி ஜாடியில் போட்டு வைக்கவும்.

மாங்காய் வைத்து எச்சில் ஊற செய்யும் சுவையான மாங்காய் தொக்கு! இப்படி செய்து பாருங்கள்!

இப்பொழுது அதன் மேல் அரை லிட்டர் அளவு நல்லெண்ணையை பச்சையாக ஊற்ற வேண்டும். 150 கிராம் அளவு பூண்டை தோல் உரித்து கொள்ளவும். இந்த பூண்டையும் ஊறுகாயுடன் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் அளவு வெந்தயத்தையும் சேர்த்து இப்பொழுது அந்த ஜாடியை மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து எடுத்து இந்த ஊறுகாயை நன்கு குலுக்கி வெயிலில் சிறிது நேரம் வைக்க வேண்டும். பூண்டு நன்றாக ஊறி வரும்பொழுது இந்த ஊறுகாயை உபயோகப்படுத்தலாம். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை வெயிலில் எடுத்து வைக்க வேண்டும். இந்த ஊறுகாய் கைப்படாமல் இருந்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். அவ்வளவுதான் சுவையான ஆவக்காய் ஊறுகாய் தயார்…!