ரவை இருக்கா? அப்போ இந்த சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் செஞ்சு பாருங்க! ரவை பணியாரம்!

ஈவினிங் ஸ்நாக்ஸாக பணியாரம் செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் பணியாரம் செய்ய வேண்டும் என்றால் அரிசி ஊற வைக்க வேண்டும், அதனை அரைக்க வேண்டும், என பல்வேறு வேலைகள் இருக்கும். நேரமும் அதிகம் எடுக்கும். ஆனால் சுலபமாக 10 நிமிடங்களில் பணியாரத்தை நீங்கள் செய்துவிடலாம். ரவை வைத்து சுவையாக சட்டென்று செய்யக்கூடிய ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் தான் ரவை பணியாரம். ரவை என்றாலே பலருக்கும் கேசரி தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த ரவை பணியாரம் வித்தியாசமான ஒரு ரெசிபி ஆகும். இதை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரவை பணியாரத்தை செய்வதும் மிக மிக சுலபம். வாருங்கள் இந்த ரவை பணியாரம் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ஈஸியா செய்யக்கூடிய ஈவ்னிங் ஸ்நாக்ஸ்… குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை பணியாரம்!

ரவை பணியாரம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு ரவையை தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். ரவை நன்றாக ஊறியதும். இதில் கால் கப் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

ரவை மற்றும் மைதாவை நன்றாக கரைத்த பிறகு இதில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையை சேர்க்க வேண்டும். இதையும் நன்றாக கரைத்துக் கொள்ளவும். அனைத்தையும் நன்றாக கரைத்தால் அவ்வளவுதான் நமக்கு பணியாரத்திற்கான மாவு தயாராகி விட்டது. இப்பொழுது இந்த பணியாரத்தை ஊற்றி எடுக்க வேண்டியது தான்.

பணியாரம் ஊற்ற தேவையான அளவு எண்ணெயை ஒரு கடாயில் காய வைத்துக் கொள்ளவும். கட்டிகள் ஏதும் இல்லாமல் கரைத்த பணியார மாவினை ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்க வேண்டும். இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைக்கவும். ஓரங்கள் நன்கு சிவந்து பணியாரம் வெந்து வந்ததும் எடுத்து விடலாம்.

அட! பால் பணியாரம் இவ்வளவு சுவையா??? இத செய்து விநாயகர் சதுர்த்திக்கு அசத்திடலாம் வாங்க!

அவ்வளவுதான் மிக எளிமையான ரவை பணியாரம் தயார்…!