சட்டுனு செய்யலாம் சத்தான சுவையான காலை நேர உணவு ராகி ரொட்டி!

ராகி அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த சிறுதானிய வகை ஆகும். இந்திய உணவுகளில் ராகியை வைத்து பலவிதமான ரெசிபிகளை நாம் சுவையாக தயார் செய்ய முடியும். ராகியில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளதால் ரத்த சோகை ஏற்படாது. மேலும் புரதம், கால்சியம் என அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்த சிறுதானிய வகையாகும். இந்த ராகியை வைத்து எப்படி சுவையான ராகி ரொட்டி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ராகி ரொட்டி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு ராகி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் முக்கால் கப் அரிசி மாவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து இதனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். நன்கு கொதிக்கும் வெண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இதை கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு கை பொறுக்கும் சூட்டுக்கு வந்ததும் மாவு அனைத்தையும் ஒன்று சேர நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு அதிக தண்ணீராக இருந்தால் கூடுதலாக அரிசி மாவு அல்லது கேழ்வரகு மாவை சேர்த்துக் கொள்ளலாம். மாவை பிசைந்த பிறகு சிறிதளவு எண்ணெயை இதன் மேல் தடவி மூடி போட்டு மூடி வைத்து விட வேண்டும். குறைந்தது 15 நிமிடங்கள் வரை இதனை அப்படியே வைத்து விடலாம்.

இப்பொழுது பிசைந்த இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். ஒரு சப்பாத்தி கல்லில் கேழ்வரகு மாவை தூவி நாம் உருட்டி வைத்துள்ள மாவை மெதுவாக தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது அதிக கனமாகவும் இருக்கக் கூடாது மிக மெல்லிசாகவும் இருக்கக் கூடாது. சப்பாத்தி போல தேய்த்து எடுத்ததும் இதனை ஒரு தோசை கல்லில் இருபுறமும் போட்டு திருப்பி வேக வைக்கவும்.

டேஸ்டியான தக்காளி தொக்கு!!! இத செஞ்சு வச்சுட்டா போதும் சைட் டிஷ்க்கு பஞ்சமே இருக்காது!

இது வெந்ததும் கரண்டி அல்லது துணி கொண்டு மென்மையாக ஒற்றி எடுத்தால் நன்கு உப்பி வருவதை பார்க்கலாம். இதன் மேல் சிறிதளவு நெய் தடவி மென்மையான சுவையான இந்த சப்பாத்தியை சூடாக பரிமாறவும். உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் இதனை சுவைக்கலாம்.

அவ்வளவுதான் சுவையான குழந்தைகளுக்கும் ஏற்ற ராகி ரொட்டி தயார்!