கிராமத்து சுவையில் மணமணக்கும் மணத்தக்காளி வத்தல் குழம்பு!

மணத்தக்காளி குடலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை நீக்க கூடிய ஆற்றல் உடைய ஒரு உணவுப் பொருளாகும். இந்த மணத்தக்காளி வைத்து கிராமங்களில் வற்றல் போட்டு வைத்து விடுவர். இந்த மணத்தக்காளி வற்றலை போட்டு வைக்கும் வத்த குழம்பானது மிக சுவையாக இருப்பதோடு உடலுக்கும் நன்மை தரும். இந்த மணத்தக்காளி வற்றலை வைத்து எப்படி கிராமத்து ஸ்டைலில் சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு வைக்கலாம் என்பதை பார்ப்போம்.

கிராமத்து முறையில் சத்துக்கள் நிறைந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப் பயறு குழம்பு!

மணத்தக்காளி வத்தல் குழம்பு வைப்பதற்கு முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் தண்ணீரில் கரைத்த இந்த புளியுடன் இரண்டு மேஜை கரண்டி அளவு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் மூன்று மேசை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் அளவு கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பூண்டை தோல் உரித்து சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு ஓரளவு வதங்கியதும் இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு மணத்தக்காளி வற்றலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கப் சின்ன வெங்காயத்தை தோலுரித்து இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம், பூண்டு நன்கு வதங்கியதும் ஒரு பெரிய தக்காளியை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு கல் உப்பை சேர்க்கவும்.

கரைத்து வைத்திருக்கும் புலி கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்து வற்ற வேண்டும். குழம்பு நன்கு வற்றியதும் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லத்தை தூளாக்கி சேர்த்து நன்கு கலந்து விட்ட இறக்கி விடலாம். இந்தக் குழம்பு சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி அப்பளம் வைத்து சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்.

வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா இந்தக் கீரையை இது போல் மண்டி வைத்து சாப்பிடுங்கள்… மணத்தக்காளி கீரை மண்டி!

அவ்வளவுதான் கிராமத்து சுவையில் அட்டகாசமான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்!