ஐந்தே நிமிடத்தில் செய்ய அசத்தலான ரெசிபி…! பிரட் ஆம்லெட்!

ஐந்தே நிமிடத்தில் சுவையான ஒரு உணவை தயார் செய்ய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் உங்களிடம் முட்டை, பிரெட் இந்த இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும் சட்டென்று இந்த ரெசிபியை தயார் செய்து விடலாம். இதன் சுவையும் அருமையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அனைவருக்கும் பிடித்த அட்டகாசமான பிரட் ஆம்லெட் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்!

முட்டை வைத்து சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு… மறக்காம செய்து பாருங்கள்!

பிரட் ஆம்லெட் செய்வதற்கு முதலில் இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தோசை கல்லில் வெண்ணை தடவி இந்த பிரட்டை நன்கு டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிரட் டோஸ்ட் செய்த பிறகு இதனை தனியே வைத்து விடவும்.

இப்பொழுது ஒரு கிண்ணத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். முட்டைகள் நுரை வரும் வரை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். முட்டைகளை நன்கு அடித்த பிறகு இதில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ஒரு சிறிய தக்காளியையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழை இவை இரண்டையும் பொடியாக நறுக்கி முட்டையில் சேர்க்கவும்.

இதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் தோசை கல்லில் சிறிதளவு வெண்ணை தடவி கலந்த இந்த முட்டையை ஊற்றிக் கொள்ள வேண்டும். ஆம்லெட் ஒருபுறம் வெந்த பிறகு நடுவில் இந்த பிரட்டை வைத்து மடித்து நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை உங்களுக்கு பிடித்த சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான பிரட் ஆம்லெட் தயாராகி விட்டது.