ஹோட்டல்களில் மட்டுமே ஸ்பெஷல் ஆக கிடைக்கக்கூடிய சில உணவு வகைகளில் ஒன்று மிளகு நண்டு பிரட்டல். மிளகு சற்று தூக்கலாக காரசாரமாக இருக்கும் இந்த நண்டு பிரட்டல் பரோட்டா, பிரியாணி, சாதம் என அனைத்திற்கும் மிகச் சிறப்பாக இருக்கும். இனி நண்டு மிளகு பிரட்டல் சாப்பிட வேண்டும் என்றால் ஹோட்டல் செல்ல வேண்டாம். வீட்டிலேயே நண்டு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், 2 கல்பாசி, 2 பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். அன்பின் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி பழம் நன்கு வதங்கி தோல் பிரிந்து வரும் பொழுது இரண்டு தேக்கரண்டி மிளகாய்த்தூள், இரண்டு தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து வதக்க வேண்டும். இந்த மசாலா எண்ணெயுடன் சேர்ந்து வதங்கும் பொழுது நிறம் சற்று தூக்கலாக இருக்கும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுவை அதில் சேர்க்க வேண்டும். நண்டின் மீது மசாலாக்கள் அனைத்தும் படும் விதத்தில் நன்கு கலந்து கொடுக்க வேண்டும். அரை டம்ளர் மட்டும் தண்ணீர் சேர்த்து மசாலா கொதிக்கும் படி மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதித்தால் போதுமானது.
வாய்ப்புண், குடல் புண்ணை குணப்படுத்தும் பச்சைப்பயிறு பால்கறி!
ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் சுண்டி வரும் நேரத்தில் அரை கப் தேங்காய், 5 சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை குழம்பில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். மீண்டும் 10 நிமிடங்கள் வரைவிதமான தீயில் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து இரண்டு தேக்கரண்டி மிளகுத்தூள், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி இறக்கினார் காரசாரமான மிளகு நண்டு பிரட்டல் தயார்.