வெயில் காலம் தொடங்கியாச்சு… குளுகுளுன்னு இளநீர் வைத்து ஃபலூடா செய்யலாம் வாங்க!

தற்பொழுது கோடை வெயில் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக இளநீர், நுங்கு, பதனி என நீர் சத்து நிறைந்த பொருட்களின் விற்பனையும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தற்போழுது அதிகமாக கிடைக்கும் இளநீரை சற்று வித்தியாசமாக ஃபலூடா செய்து சாப்பிடலாம் வாங்க.

ஒரு கடாயில் 2 இளநீரை உடைத்து அதன் தண்ணீரை மட்டும் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி அளவு அகரகர் மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும்.


அகரகர் நன்கு கரைந்து தண்ணீர் கொதிக்கும் பொழுது அதை இறக்கி ஒரு கண்ணாடி பாத்திரத்திற்கு மாற்றி ஒரு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் குளிர வைக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு பின் இந்த இளநீர் ஜெல்லி போன்ற பதத்திற்கு வந்துவிடும். அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாமல் பெங்காலி ஸ்டைல் கடலைப்பருப்பு சப்ஜி!

அந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் இளநீர் உள் இருக்கும் வழுவழுப்பான சதை பகுதி, தேங்காய் பால் ஒரு கப், பசும்பால் ஒரு கப், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

in

இப்பொழுது ஃபலூடா செய்ய தயாராகலாம். முதலில் ஒரு கண்ணாடி டம்ளரில் ஒரு தேக்கரண்டி ஊறவைத்த சப்ஜா விதைகள், இளநீரின் உள் இருக்கும் வழுக்கை பகுதி ஒரு தேக்கரண்டி, இறுதியாக தயார் செய்த இளநீர் ஜெல்லி, மிக்ஸியில் அரைத்த வழுக்கை ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி ஐஸ்கிரீம் சேர்த்துக் கொள்ளலாம்.

ஐஸ்கிரீம் சேர்ப்பது உங்கள் விருப்பமே. இறுதியாக நட்ஸ் தூவி கலந்து கொடுத்தால் குளுகுளு இளநீர் பல்லூடா தயார்.