வீட்டில் காய்கறி இல்லாத சமயங்களில் இல்லத்தரசிகளுக்கு கைகொடுக்கும் அப்பளம் குழம்பு!

வீடுகளில் மதிய வேலை சாதம் சாப்பிடும் பொழுது என்ன குழம்பு வகையாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ற காய்கறிகள் பல இருந்தாலும் சரி ஒரு இரண்டு அப்பளம் வைத்து சாப்பிடும் பொழுது தான் அந்த மதிய உணவே திருப்தியாக இருக்கும். அப்படி அப்பளம் இல்லாத பந்தியும் கிடையாது, விருந்தும் கிடையாது. அறுசுவை உணவிற்கும் அப்பளத்திற்கும் முக்கிய பங்கு இருக்கும் இந்த நேரத்தில் எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்தில் அப்பளம் வைத்து ஒரு அருமையான குழம்பு செய்து சாப்பிடலாம் வாங்க….

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொரிந்ததும் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் பொடியாக நறுக்கிய 10 முதல் 15 சின்ன வெங்காயம், 10 பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த தக்காளி பழம் இரண்டு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் பொழுது ஒரு தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு குழைவாக வந்ததும் மூன்று தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும்.

பாதி எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் ஒரு கப் மற்றும் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

நம் வீட்டு சாம்பார் வாசனையில் ஊரே மணக்க வேண்டுமா? சாம்பார் பொடி செய்வதற்கான ரெசிபி இதோ!

இந்தக் குழந்தை மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்து வரும் வேலையில் நாம் பொறுத்து வைத்திருக்கும் அப்பளத்தை அப்படியே அதில் சேர்த்துக் கொள்ளலாம். அப்பளம் சேர்த்ததும் குழம்பில் உள்ள தண்ணீரை அப்பளம் அப்படியே உறிஞ்சி கொள்ளும்.

அப்பளம் சேர்த்த இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது சுவையான அப்பளம் குழம்பு தயார். சூடான சாதத்துடன் இந்த குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது சுவை மேலும் அருமையாக மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும்.