பிரியாணி சாப்பிட ஆசையா? வாங்க பிரியாணி மாதிரியே எம்டி குஸ்கா வீட்டிலேயே செய்யலாம்!

அனைவருக்கும் பிடித்த தலைசிறந்த உணவுகளில் ஒன்றாக தற்பொழுது பிரியாணி மாறியுள்ளது. ஆனால் அந்த பிரியாணியை நாம் நினைக்கும் நேரங்களில் நினைக்கும் சுவையில் சாப்பிட முடியாது. அப்படி சாப்பிட முடியாத நேரங்களில் நம் வீட்டிலேயே எம்டி குஸ்கா செய்து ஆசையை தீர்த்துக் கொள்ளலாம். அப்படி எம்டி குஸ்கா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

பிரியாணியின் அதே சுவையில் இருக்கும் இந்த எம்டி குஸ்கா செய்வதற்கு ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஒன்று, கிராம்பு இரண்டு, ஏலக்காய் ஒன்று, பிரியாணி ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீள நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை எண்ணெயுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் கைபிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்ததும் அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற வீதத்தில் முதலில் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பிரியாணி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்து விட வேண்டும். குக்கரில் நாம் சேர்த்திருக்கும் ஒன்றரை கப் தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜவ்வரிசியை வைத்து பாயாசம் மட்டுமல்ல பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்யலாம்!

அரிசியை குக்கரில் சேர்த்த பின் நன்கு கலந்து கொடுத்து மீண்டும் ஒருமுறை உப்பு சரியாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் இந்த தருணத்தில் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குக்கரை நன்கு மூடி இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

விசில்கள் வந்ததும் சில நிமிடங்கள் நேரங்கள் அழுத்தம் குறையும் வரை காத்திருக்கவும். அதன் பின் குக்கரை திறந்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான எம்டி குஸ்கா தயார்.

Exit mobile version