கிராமத்து சமையல் என்றாலே நம் மனதில் நினைவுக்கு வருவது காரக்குழம்பு தான். அதிலும் எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று. எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு ரெசிப்பி இதோ!
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – 5
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் – ஒரு தேக்கரண்டி
மல்லி – இரண்டு தேக்கரண்டி
வத்தல் – 10 -15
வெந்தயம் – அரை தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 5
தேங்காய் – அரை கப்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
வெள்ளைப்பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – 10 முதல் 15
தக்காளி – இரண்டு
குழம்பு மிளகாய்த்தூள் – மூன்று தேக்கரண்டி
புலி – எலுமிச்சை பழ அளவு
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை மற்றும் மல்லி இலை – கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்தரி, மிளகு, சீரகம், காய்ந்த வத்தல், மல்லி, வெள்ளை எள், தேங்காய் சேர்த்து நன்கு வாசனை வரும்படி வறுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கத்திரிக்காவை நன்கு கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த மசாலாவில் சிறிதளவு எடுத்து கத்திரிக்காவில் உள்பக்கம் நன்கு படும் அளவிற்கு கலந்து கொடுக்க வேண்டும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மசாலா கத்திரிக்காய் எண்ணெயில் பொறிக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் எண்ணெயில் பொரித்தெடுத்தால் போதும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வளர்க்க வேண்டும். மிளகாய் தூள் பச்சை வாசனை சென்றவுடன் புளி கரைசலை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குழம்பிற்கு தேவையான உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் குழம்பு கொதிக்க வேண்டும்.
ஈவினிங் ஸ்நாக்ஸாக ஸ்வீட் சாப்பிட ஆசையா? செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ரெசிபி இதோ!
குழம்பிலிருந்து பச்சை வாசனை சென்றவுடன் நாம் எண்ணெயில் வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காவை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீண்டும் ஐந்து நிமிடம் மிதமான தீயில் இந்த குழந்தை கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது நமக்கு சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார். இறுதியாக மல்லி இலை மற்றும் கருவேப்பிலை தூவி இந்த குழம்பை பரிமாறலாம்.. சூடான சாதத்துடன் இந்த குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.