இட்லி மற்றும் தோசைக்கு எப்பொழுதும் ஒரு பெஸ்ட் காம்பினேஷன் என்றால் அது சாம்பார் மட்டும்தான். இந்த சுவையான சாம்பார் பருப்பு இல்லாத பொழுது எளிமையான முறையில் அதே சுவையுடன் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி பழம் – 3
பச்சை மிளகாய் – 5
பெருங்காயம் – சிறிய துண்டு
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
சாம்பார் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
கடலை மாவு – மூன்று தேக்கரண்டி
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
வர மிளகாய் – இரண்டு
கடுகு மற்றும் சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெள்ளைப்பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை – கைப்பிடி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில்கள் வரை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் அழுத்தம் குறைந்ததும் தக்காளி , வெங்காயத்தை நன்கு மசித்து கொள்ளவும். அதன் பின் மூன்று தேக்கரண்டி கடலைமாவை நன்கு தண்ணீரில் கரைத்து குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் நன்கு கொதிக்கும் படி வைக்கவும்.
ஆந்திரா ஸ்பெஷல் ஃபேமஸ் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி! ரெசிபி இதோ!
அதே நேரத்தில் மற்றொரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வர மிளகாய், தட்டி வைத்த வெள்ளைப் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். இந்த தாளிப்பை கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து வாசனைக்காக மல்லி இலைகள் தூவினால் பருப்பு இல்லாத ஈசி சாம்பார் தயார். இட்லி மற்றும் தோசைக்கு இந்த சாம்பார் மிக பொருத்தமாக இருக்கும்.