சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ் ஆக ராஜ்மா வைத்து காரசாரமான மசாலா செய்ய ஆசையா.. அப்போ ஒரு முறையாவது இந்த பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா மசாலா நமது வீடுகளில் ட்ரை பண்ணுங்க. எளிமையான ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
ராஜ்மா – ஒரு கப்
நெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 2
பிரியாணி இலை – 2
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – இரண்டு
தக்காளி பழம் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – ஒரு தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி – ஒரு தேக்கரண்டி
மல்லியிலே மற்றும் புதினா இலை – கைப்பிடி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
ராஜ்மாவை குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். ஊறவைத்த இந்த ராஜ்மாவை ஒரு குக்கரில் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் பட்டை, பிரியாணி இலை , சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மற்றும் வேக வைத்த ராஜ்மாவில் இரண்டு மூன்று சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த இந்த தக்காளியை வெங்காயம் வதங்கிய பின் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இப்பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இதில் நாம் வேக வைத்திருக்கும் ராஜ்மா மற்றும் அதன் தண்ணீரை சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
வெண்டைக்காய் வைத்து எப்பவும் காரக்குழம்பு, சாம்பார் தானா! நார்த் இந்தியன் ஸ்டைல் பிந்தி மசாலா!
பத்து நிமிடங்கள் கழித்து தேவையான அளவு உப்பு, கரம்மசாலா தூள், கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு கிளற வேண்டும். இறுதியாக மல்லி இலை மற்றும் புதினா இலைகளை தூவி இறக்கினால் சுவையான பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா மசாலா தயார்.