நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு!

ஆட்டுக்குடலில் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளது. உடலின் செரிமான பிரச்சனை, அல்சர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆட்டுக்குடல் கறி மிகவும் உதவுகிறது. புரோட்டின் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ள இந்த குடல் கறியை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வரும் பொழுது உடலின் வளர்ச்சியில் நல்ல மாற்றம் கிடைக்கும். இந்த ஆட்டுக்குடல் கறி நம் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ…

இந்த குழம்பு செய்வதற்கு முதலில் மசாலா அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு பெரிய அளவு பட்டை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், 3 கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக அதனுடன் ஐந்து பல் வெள்ளை பூண்டு, பத்து சின்ன வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரைக்கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த இந்த பொருட்களை நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அதை குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டாக கீறிய ஒரு பச்சையின் மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வீட்டில் காய்கறி இல்லாத சமயங்களில் இல்லத்தரசிகளுக்கு கைகொடுக்கும் அப்பளம் குழம்பு!

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த தக்காளி பழம் ஒன்றை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக்குடலை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு நிமிடம் எண்ணெயில் ஆட்டுக்குடலை நன்கு வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது குக்கரை மூடி குறைந்தது ஏழு முதல் எட்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.. குக்கரின் அழுத்தம் குறைந்ததும் இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான ஆட்டுக்குடல் கறி தயார்.