நம் வீட்டு சமையல் அறையில் ராணியாக மாற இல்லத்தரசிகளுக்கு எளிமையான 10 சமையல் டிப்ஸ்!

சுவையாக சமைத்தால் மட்டும் நம் சமையல் அறையில் ராணியாக மாற முடியா.து சில சில மாற்றங்கள் செய்து சுவைக்கு நிகராக புதுமையாக சமைக்கும் பொழுது மட்டுமே சமையல் அறையில் ராணியாக நிலைத்திருக்க முடியும். அப்படி காலத்திற்கு ஏற்றார் போல் சமையலில் சில மாற்றங்கள் செய்து சுவையை அதிகரித்து சாப்பிடுபவர்களின் நாக்கில் எச்சி ஊற செய்வதற்கான எளிமையான சில டிப்ஸ்கள் இதோ!

நாம் காரக்குழம்பு , புளிக்குழம்பு, மீன் குழம்பு என அனைத்திற்கும் புது புளியை மட்டும் வைத்து சமைக்காமல் பாதி அளவு பழைய புளி, பாதி அளவு புதுப் புளி ஒன்றாக சேர்த்து ஊற வைத்து சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது சுவை சற்று அதிகமாக இருக்கும்.

பச்சை பட்டாணியை வேகவைக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் பட்டாணியில் நிறம் மாறாமல் சுவை அருமையாக இருக்கும்.

நாம் அடை தோசைக்கு மாவு ஊறவைத்து அரைக்கும் பொழுது இரண்டு தேக்கரண்டி கொள்ளு சேர்த்து ஊற வைத்து அரைத்தால் அடை மாவு நன்கு சுவையாக இருக்கும்.

மாவடு ஊறுகாய் செய்யும் பொழுது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து ஊறுகாயை பதப்படுத்தினால் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் அதே சுவையில் நீடித்து இருக்கும்.

உருளைக்கிழங்கு வாங்கும் பொழுது தோல் பச்சையாக இருந்தாலோ, உருளைக்கிழங்கின் சில பகுதிகள் முளைத்து இருந்தாலும் அதை வாங்குவதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது.

முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது நாம் பொடியாக நறுக்கிய முள்ளங்கியை சற்று நல்லெண்ணெயில் வதக்கி சேர்த்து சாம்பார் வைக்கும் பொழுது வாசனை அதிகமாக இருக்கும்.

வத்தக்குழம்பு சமைக்கும் பொழுது கடாயில் ஓரங்களில் குழம்பிலிருந்து எண்ணெய்ப் பிரிந்து வரும் வரை சுண்ட கொதிக்க வைக்கும் பொழுது வத்தக்குழம்பின் சுவை சற்று தூக்கலாக இருக்கும்.

அம்மாவின் கை பக்குவத்தில் வறுத்து அரைத்த வெண்டைக்காய் புளிக்குழம்பு!

நம் வீடுகளில் வெங்காய பஜ்ஜி செய்யும் பொழுது வெங்காயத்தை வட்ட வட்டமாக நறுக்கி அப்படியே சேர்க்காமல் தோசை கல்லில் லேசாக வதக்கி அதன்பின் பஜ்ஜி மாவில் சேர்த்து கலந்து பஜ்ஜி செய்தால் வெங்காயம் தனியாக பிரிந்து வராது.

வேகவைத்த முட்டையை அதன் ஓடுடன் குளிர்ந்த நீரில் போட்டு வைக்கும் பொழுது முட்டை நீண்ட நேரத்திற்கு கெட்டுப் போகாமலும் அதன் போல் உரிக்கும் பொழுது எளிமையாகவும் இருக்கும்.

சிக்கன் மற்றும் மட்டன் கிரேவி செய்யும் பொழுது அதில் இரண்டு உருளைக்கிழங்குகளை துண்டுகளாக நறுக்கி சேர்த்து சமைக்கும் பொழுது அந்த கிரேவியின் சுவை சற்று அதிகமாக இருக்கும்.