பொதுவாக கோயில் நெய்வேத்தியம் என்றால் நம்மில் பலருக்கும் பிடிக்கும். சிறிதளவு கிடைக்கும் அந்த நெய்வேத்தியத்தின் சுவை நாக்கை விட்டு நீங்கவே நீங்காது. ஒரு வாய் சாப்பிட்டாலே போதும் என்ற அளவிற்கு தித்திப்பாகவும் மனதிற்கு இதமான ஒரு மன நிம்மதியை கொடுக்கும் இந்த பிரசாதம். அதுவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு கடவுள் முருகப்பெருமானுக்கு படைக்கும் நெய்வேத்திய பிரசாதமான திருப்பாக்கம் செய்வது எப்படி என இந்த ரெசிபியில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முந்திரி – கால் கப்
கடலை மாவு – கால் கப்
சர்க்கரை – முக்கால் கப்
பால் – அரைக்கப்
நெய் – கால் கப்
குங்குமப்பூ – இரண்டு சிட்டிகை
செய்முறை
முதலில் இரண்டு ஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஓரமாக வைத்து விடவும். அதன் பின் கொடுக்கப்பட்டுள்ள முந்திரிகளை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பில் இருந்து எண்ணெய்கள் பிரியாத வரை பொறுமையாக அரைக்க வேண்டும்.
கால் கப் கடலை மாவை சல்லடைகள் கொண்டு ஒரு முறை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு நன்கு மென்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அடிகனமான கடாய் ஒன்று எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். அதில் அந்த கால் கப் கடலை மாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதில் வாசனைகள் வந்தவுடன் பால் சேர்த்து கிளற வேண்டும். கடலை மாவுடன் பால் சேர்த்து கிளறும் பொழுது மாவு கட்டி இல்லாத அளவிற்கு பொறுமையாக கிளற வேண்டும்.
மேலும் இந்த பிரசாதம் தயாரிக்கும் பொழுது அடுப்பில் மிதமான தீயில் இருக்க வேண்டும். அதிகப்படியாக தீ வைத்தால் பிரசாதம் வீணாக மாறிவிடும் . மிதமான தீயில் சமைக்கும் பொழுது பிரசாதம் தித்திப்பாக நல்ல முறையில் வரும். கடலை மாவுடன் பால் நன்கு சேர்ந்து வெந்து வர வேண்டும். அந்த நேரத்தில் தேவையான அளவு நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த இடத்தில் பொடியாக மாற்றிய முந்திரியை சேர்த்து கொள்ளலாம்.
இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத கிராமத்து ஸ்டைல் சுண்ட வத்தக் குழம்பு!
அதன் பின் நம் பாலுடன் ஊற வைத்திருக்கும் குங்குமப்பூவை சேர்த்து கிளற வேண்டும். இதில் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை இந்த கடலை மாவை விடாமல் கிளற வேண்டும். மாவு இறுக்கமாக மாறும்பொழுது தேவையான அளவு நெய் சேர்த்து கிளறும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும். இறுதியாக மாவு அல்வா பதத்திற்கு வந்துவிட்டால் பிரசாதம் தயாராக மாறிவிட்டது.
அடுப்பை அணைத்து இந்த பிரசாதத்தை ஐந்து நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். அதன் பின் நாம் வாழை இலைக்கு மாற்றி முருகனுக்கு நெய் வைத்தியமாக படைத்து நாம் வேண்டுதல்களை மனம் உருகி வேண்டிக்கொள்ளலாம்.