கோடை காலங்களில் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பழ வகைகளில் தர்பூசணியும் ஒன்று. அதிக நீர்ச்சத்துள்ள இந்த பழம் மலிவான விலையில் கிடைப்பதால் அனைவரும் வாங்குவதும் வழக்கம். ஆனால் இந்த தர்பூசணியை வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாக ஜூஸ் அல்லது இனிப்பு வகையாக அல்வா செய்வது நாம் பார்த்துள்ளோம். சற்று மாறுதலாக தர்பூசணி வைத்து அருமையான சாதம் ஒன்று தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து மகிழலாம் வாங்க.
தர்பூசணி சாதம் செய்வதற்கு நன்கு பழுத்த தர்பூசணி ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் பகுதியை எடுத்து பொடி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு ஜூஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தர்பூசணி பழத்தின் விதையுடன் அரைத்தாலும் தவறு இல்லை. அரைத்த அந்த சாற்றை நாம் வடிகட்டி கொண்டு நன்கு வடித்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த சாதம் செய்வதற்கு நாம் பாஸ்மதி அரிசியை பயன்படுத்த வேண்டும். சாதம் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைத்து விட வேண்டும். அடுத்ததாக ஒரு குக்கரில் ஊறவைத்த பாஸ்மதி அரிசி ஒரு கப் சேர்த்துக் கொண்டால் அதற்கு ஒன்றரை கப் தர்பூசணி சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி சில்லி பிளக்ஸ், கால் தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
ஆட்டுக்கால் பாயாவிற்கு போட்டியாக களமிறங்கிய வெஜிடபிள் பாயா! தரமான ரெசிபி இதோ!
மிதமான தீயில் இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரின் அழுத்தம் குறையும் வரை ஒரு ஓரமாக வைத்து விடவும். அதே நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் நன்கு சூடானதும் இரண்டு தேக்கரண்டி காய்ந்த தர்பூசணி விதைகள், ஒரு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதை நாம் வேக வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியுடன் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.
இறுதியாக வாசனைக்கு புதினா மற்றும் மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சாதத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான தர்பூசணி சாதம் தயார்.