சின்ன சின்ன மாற்றத்தில் சமையல் அறையின் ராணியாக மாறலாம்…சமையல் டிப்ஸ் இதோ!

சமைக்கும் பொழுது சின்ன சின்ன மாற்றங்கள் செய்து புதுவிதமாக மாற்றி சமைக்கும் பொழுது அதன் சுவை கூடுதலாக இருக்கும். அந்த வகையில் நாம் நம் வீட்டு சமையல் அறையின் ராணியாக மாற தேவையான சில சமையல் டிப்ஸ்கள் இதோ..

நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் பொழுது நெல்லிக்காயை வேக வைத்து தாளிக்கும் நேரத்தில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் அதிக நாட்கள் கெடாமலும் வாசனையாகவும் இருக்கும்.

வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்யும் பொழுது சிறிதளவு எள்ளை வறுத்து அதில் சேர்த்து அரைக்கும் பொழுது சுவை சற்று கூடுதலாக இருக்கும்.

சப்பாத்தி மாவை நாம் பூரிக்கட்டையில் திரட்டும் பொழுது மாவு கட்டையில் ஒட்டாமல் இருப்பதற்காக சிறிது நேரம் நாம் பூரி மாவை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு அதன் பின் வட்டமாக தட்டினால் பூரி கட்டையில் மாவு ஒட்டாமல் எளிமையாக வரும்.

தேன்குழல் முறுக்கு, சீடை செய்யும் பொழுது அந்த மாவில் தண்ணீர் ஊற்றாமல் வெந்நீர் ஊற்றி கலந்து கொண்டால் எத்தனை நாட்கள் ஆனாலும் முறுக்கு நமத்துப் போகாமல் முறுமுறுவென இருக்கும்.

தூதுவளை இலையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷம், சளி தொல்லையிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

வாரத்தில் மூன்று முறை முடக்கத்தான் கீரையை தோசையாகவோ, சட்னியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

முகம் பளபளவென மாற காலையில் எழுந்தவுடன் காய்சாத பாலில் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி சருமம் ஈரப்பதத்துடன் வலுவலு என இருக்கும்.

நம் வீட்டில் ரசம் செய்யும் பொழுது காய்ந்த வத்தலை பயன்படுத்தாமல் பச்சை மிளகாய் பயன்படுத்தி ரசம் செய்து வந்தால் ரத்தத்தின் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.

பொதுவாக சிக்கன், இறால், மீன் என பொரிக்கும் பொழுது அவற்றில் கான்பிளவர் மாவுடன் சிறிதளவு மைதா மாவு சேர்த்து மசாலாக்களுடன் கலந்து எண்ணெயில் பொரிக்கும் பொழுது, மசாலா பிரியாமல் பொரித்தெடுக்கலாம்.

கையில் அழகுக்காக மருதாணி வைக்கும் பொழுது அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து வைத்தால் நன்கு சிவப்பாக கைகள் மாறும்.