கேசரியை விட தித்திப்பான சுவையில் ஐந்தே நிமிடத்தில் நாவில் வைத்ததும் கரையும் தரமான ஸ்வீட் ரெசிபி!

நமக்கு சில நேரங்களில் இனிப்பு சாப்பிட தோன்றும் பொழுது மனதில் முதலில் தோன்றுவது கேசரி தான். ஐந்து முதல் பத்து நிமிடத்தில் செய்யும் இந்த கேசரியை விட எளிமையான முறையில் நாவில் வைத்ததும் கரையும் அதை சுவையில் புதுமையான ஸ்வீட் செய்யலாம் வாங்க. இந்த ஸ்வீட் செய்வதற்கான ரெசிபி இதோ.

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் சர்க்கரைக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்பது அளவு. அதன்படி ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மிதமான தீயில் இந்த கலவையை சூடுபடுத்த வேண்டும்.

சர்க்கரை கரைந்து வந்தால் போதுமானது. கம்பி பதம் வரவேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை நன்கு தண்ணீர் உடன் கரைந்ததும் அடுப்பை அணைத்து பாத்திரத்தை ஓரமாக வைத்து விடலாம்.

அடுத்ததாக இந்த பலகாரம் செய்வதற்கு ஒரு அடி கனமான கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அரை கப் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் அதிகமாக சேர்த்து இனிப்பு செய்தால் திகட்டும் என நினைப்பவர்கள் கால் கப் நெய், கால் கப் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணெய் மற்றும் நெய் நன்கு சூடானதும் ஒரு கப் கோதுமை மாவு அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் இந்த கோதுமை மாவு எண்ணெய் மற்றும் நெய்யுடன் சேர்ந்து வறுபட்டு பொன்னிறமாக மாறும். கோதுமை மாவு சேர்த்தவுடன் அடுப்பின் தீயை மிதமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கோதுமை மாவில் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். கோதுமையின் பச்சை வாசனை சென்று நல்ல நெய்யுடன் சேர்ந்து ஒரு வாசனை வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

கோதுமை மாவில் பொன்னிறமாக மாறும் நேரத்தில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை தண்ணீரை கடாயில் சேர்த்து கிளற வேண்டும்.

சர்க்கரை தண்ணீரை மொத்தமாக சேர்த்து சிலராமல் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சிலரும் பொழுது கட்டிகள் விழாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம். தண்ணீர் சேர்த்த உடன் கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும்.

முதலில் சேர்த்த தண்ணீர் வற்றி மாவு கெட்டியாக மாறிய பின் மீதம் இருக்கும் அடுத்த சர்க்கரை பாகு தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி குறைந்தது மூன்று அல்லது நான்கு முறையாக பிரித்து சர்க்கரை தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக நாம் சேர்க்க அனைத்து தண்ணீரும் பற்றி மாவு நன்கு வெந்து அல்வா பதத்திற்கு கெட்டியாக மாறி வர வேண்டும். இப்பொழுது இந்த சுவையான ஸ்வீட் தயார். இதனுடன் விருப்பப்பட்டால் நெய் வறுத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த சூடான ஸ்வீட்டை சிறிது நேரம் ஆரம்பிக்க வேண்டும். அதன் பின் நமக்கு விருப்பமான முறையில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.

வாயில் வைத்த உடன் கரையும் இந்த தித்திப்பான ஸ்வீட் கோதுமை வைத்து செய்வதால் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.