எல்லா காலங்களிலும் எளிமையாக மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த நார்த்தம் பழத்தில் பலவிதமான சத்துக்கள் உள்ளது. மலச்சிக்கல், சிறுநீரக கல் நோய், வயிற்றுப்புழு, வாதம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது. மேலும் பசியின்மைக்கு இந்த நார்த்தம் பழம் ஏற்ற ஒரு தீர்வாகும். நம் உணவில் அன்றாடம் நார்த்தம் பழத்தை எடுத்துக் கொண்டு வரும் பொழுது செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். எளிமையான முறையில் நார்த்தம் பழம் சாதம் செய்யும் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
நார்த்தம் பழம் – 1
சாதம் – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10 முதல் 15
பச்சை மிளகாய் – 4
தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – கைப்பிடி அளவு
மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் பொடி – அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக வேண்டும். அதில் தாளிப்பிற்காக கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் பொன்னிறமாக வதங்கியதும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இனி நம்ம வீட்டிலயும் ட்ரை பண்ணலாம் இத்தாலியன் ஸ்டைல் சீஸ் பாஸ்தா!
இந்த நாத்தம் பழம் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு நார்த்தம் பழத்தை கழுவி சுத்தம் செய்து அதன் சாறுகளை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிழிந்து எடுத்த நார்த்தம் பழம் சாற்றை கடாயில் சேர்க்கும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது இறுதியாக ஒரு கப் சாதத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும் . சுவைக்கு ஏற்ப தேவைப்பட்டால் மீண்டும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமக்கு சுவையான நார்த்தம் பழம் சாதம் தயார். இதை உருளைக்கிழங்கு மசாலா அல்லது அப்பளம் அல்லது தேங்காய் துவையலுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.