ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக டீ, காபி, சூப் குடித்து போர் அடிச்சுட்டா, ஒரு முறை இந்த பால் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு பாருங்க சுவை நாக்கை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கும். டேஸ்டான செட்டிநாடு ஸ்டைல் பால் கொழுக்கட்டை ரெசிபி இதோ..
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – ஒரு கப்
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
பால் – அரை லிட்டர்
ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
சர்க்கரை – 50 முதல் 75 கிராம்
தேங்காய் பால் – அரைக்கப்
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் சிறிதளவு உப்பு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளரி கொள்ள வேண்டும். சூடான வெந்நீர் சேர்த்து இந்த மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் சூடாக இருக்கும் பொழுது மாவு விரைவினால் கொழுக்கட்டை மிகவும் மென்மையாக வரும்.
மற்றொரு கடாயில் அரை லிட்டர் பால் சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பால் நன்கு கொதித்து வரும் பொழுது நாம் உருண்டை பிடித்து வைத்திருக்கும் அரிசி மாவை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் இதை 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அதன் பின் சிறிதளவு ஏலக்காய் தூள்,சர்க்கரை சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.
அஜீரணம் மற்றும் வாய்வு தொல்லையா? பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் ஓட பூண்டு சாதம் ரெசிபி இதோ!
இப்பொழுது ஒரு தேக்கரண்டி அரிசி மாவில் தண்ணீர் கலந்து அதில் ஊற்றவும். இறுதியாக தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இப்பொழுது நமக்கு சுவையான சத்து நிறைந்த பால் கொழுக்கட்டை தயார்.