இப்பவும் லஞ்ச் பாக்ஸ்க்கு கேரட் ரைஸ், லெமன் ரைஸ் தானா? கொஞ்சம் வித்தியாசமா அவரைக்காய், மிளகாய் ரைஸ் ட்ரை பண்ணலாம்!

பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான லஞ்ச் கொண்டு செல்லாமல் சற்று வித்தியாசமான இன்னும் சுவையான சத்து நிறைந்த அவரக்காய் வைத்து ஒரு லஞ்ச் ரெசிபி செய்து சாப்பிடலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

சாதம் – ஒரு கப்
அவரைக்காய் – ஒரு கப்
வெங்காயம்- ஒன்று
தக்காளி பழம்- ஒன்று
குடைமிளகாய் – ஒன்று
வெள்ளை பூண்டு – 10 பல்
காய்ந்த வத்தல் – 3
கடுகு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் இவை இரண்டையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன் பின் கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். குடமிளகாய் அடுத்து பொடியாக நறுக்கிய அவரைக்காய் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் வெள்ளைப்பூண்டு மிளகாய் வத்தல் கலவையை இதில் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியின் அதே டேஸ்ட்டில் வெஜ் சோயா பிரியாணி! ரெசிபி இதோ!
இப்பொழுது சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

அடுத்ததாக அவரைக்காய் வெகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து முடி போட்டு வைக்கவும். 10 கழித்து பார்த்தால் அவரைக்காய் நன்கு வெந்து இருக்கும், இப்பொழுது நாம் வடித்த சாதம் சேர்த்தி கிளறினால் அவரைக்காய் மிளகாய் சாதம் தயார்.