பாஸ்தா வேண்டும் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஹோட்டல் ஸ்டைலில் நம் வீட்டிலேயே சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்
பாஸ்தா – ஒரு கப்
சீஸ் – 5 துண்டு
வெள்ளைப்பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
ஸ்வீட் கான் – ஒரு கப்
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு தேக்கரண்டி
ஆர்கெனோ – ஒரு தேக்கரண்டி
மைதா மாவு – ஒரு தேக்கரண்டி
பால் ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
மல்லி இலை – கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் பாஸ்தாவை கொதிக்கும் தண்ணீரில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தேவையான அளவு சீஸ் சேர்த்துக் கொண்டு அதில் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், ஸ்வீட் கான் சேர்த்து வதக்க வேண்டும். இந்த காய்கறிகளுக்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
அடுத்ததாக அதில் சில்லி ஃபிளக்ஸ், ஆர்கெனோ சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிட வேண்டும்.
ஒரு கடாயில் சிறிதளவு பட்டர் சேர்த்து உருக்க வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கடலைமாவு நன்கு கலந்ததும் அதில் பால் சேர்த்து கலக்க வேண்டும். பால் கொதித்து கட்டியாக மாறும் பொழுது நமக்கு தேவையான சீஸ் துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக நாம் வதக்கி வைத்திருக்கும் காய்கறியை அதில் கலந்து கொள்ளலாம்.
இறுதியாக நாம் வேக வைத்திருக்கும் பாஸ்தாவை அதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சுவைக்கேற்ப உப்பு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக மல்லி இலைகள் தூவினால் இத்தாலி ஸ்டைல் சீஸ் பாஸ்தா ரெடி.