பொதுவாக ஆந்திர மாநிலத்தில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் காரசாரமாக சுவை மிகுந்ததாக இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் மிக ஃபேமஸான கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணியை நம் வாழ்நாளில் ஒரு முறையாவது சுவைத்து பார்க்க வேண்டும். வீட்டிலேயே ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்து சுவைக்கலாம் வாங்க ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
சிக்கன் – 350 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி – அனைத்திலும் இரண்டு
கசகசா – ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம்- ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
மல்லி – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – 10
கஸ்தூரி மேத்தி – ஒரு தேக்கரண்டி
வத்தல் – 6
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
என்னை – ஒரு தேக்கரண்டி
நெய் – இரண்டு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மல்லி மற்றும் புதினா இலை – கைப்பிடி அளவு
தயிர் – ஒரு கப்
எலுமிச்சை பழம் – பாதி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரியாணி சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். அதை போல் காய்ந்த மிளகாய் தண்ணீருடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,, கல்பாசி, சீரகம், மிளகு, பெருஞ்சீரகம், சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு, மல்லி, கஸ்தூரி மேத்தி, ஊறவைத்த வத்தல் இவற்றை மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்க வேண்டும். அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும், வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது மல்லி இலை மற்றும் புதினா இலைகள் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை எண்ணெயுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் தயிர் மற்றும் பாதி அளவு எலுமிச்சை பல சாறு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். அடுத்ததாக நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் சேர்த்து மசாலாக்களில் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற வீதத்தில் நாம் தண்ணீர் அளவை எடுத்துக் கொள்ளலாம்.
தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியின் அதே டேஸ்ட்டில் வெஜ் சோயா பிரியாணி! ரெசிபி இதோ!
முதலில் பாதி அளவு தண்ணீரை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து எடுக்க வேண்டும். அதன் பின் மீதி தண்ணீரும் சேர்த்து பாஸ்மதி அரிசியை அதனுடன் சேர்க்க வேண்டும். குக்கரை நன்கு மூடி மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். விசில் வரவேண்டிய அவசியம் இல்லை. இறுதியாக நமக்கு கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி தயார். இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொடுத்தால் நமக்கு சுவையான பிரியாணி தயார்.