புளியோதரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் கோயில் பிரசாதமாக கொடுக்கும் புளியோதரைக்கு அனைவரும் அடிமைதான். இனி கோவிலில் கொடுக்கும் அதே சுவையில் புளியோதரை இனி நம்ம வீடுகளில் ட்ரை பண்ணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 3 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – மூன்று தேக்கரண்டி
காய்ந்த வத்தல் – 10 முதல் 15
மல்லி – 1 தேக்கரண்டி
மிளகு – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
வெந்தயம் – அரை தேக்கரண்டி
எள் – ஒன்றரை தேக்கரண்டி
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
புலி – எலுமிச்சை பழ அளவு
மஞ்சள் தூள் – மூன்று சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் தேவையான அளவு புளியை வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், வத்தல், மல்லி, எல், வெந்தயம், கருவேப்பிலை இவை அனைத்தையும் தனித்தனியாக வாசனை வரும்படி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக வேண்டும். அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்துக் கொள்ளவும். வாசனைக்காக கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் எண்ணெயுடன் சேர்ந்து பொரிந்து வர வேண்டும்.
அந்த நேரத்தில் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஊற வைத்திருக்கும் புளியை சுத்தம் செய்து அதன் தண்ணீரை இந்த கலவையினுள் சேர்க்க வேண்டும். அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் புளியோதரை பொடியை புளி கரைசலில் சேர்க்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையை நன்கு கிளற வேண்டும் பின் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்கும் பொழுது இந்த கலவையிலிருந்து எண்ணை பிரிந்து குழம்பு தயாராக இருக்கும். இப்பொழுது இதை சில நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
உதிரியான சாதத்தை எடுத்து இந்த கலவையில் சேர்க்கும் பொழுது நமக்கு சுவையான புளியோதரை கிடைக்கும். சாதமும் புளியோதரை தொக்கும் சேர்ந்து கலக்கும் பொழுது அனைத்திற்கும் புளியோதரை பொடியை மேலாக தூவி சேர்த்தால் மனம் இங்கு சற்று கூடுதலாக இருக்கும். இப்பொழுது நமக்கு கோவில் சுவையில் புளியோதரை தயார். இந்த புளியோதரையில் கூடுதல் சுவைக்காக முந்திரி பருப்பு அல்லது வேர்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.