உப்புமா பிடிக்காதவர்களுக்கு… அரிசி ரவை வைத்து பாரம்பரியமான உப்புமா கொழுக்கட்டை!

இட்லி மாவு இல்லாத சமயங்களில் பெரும்பாலான வீடுகளில் உப்புமா செய்வது வழக்கமான ஒன்று. அப்படி செய்யப்படும் உப்புமா நம்மில் பலருக்கு பிடிக்காது. இப்படி உப்புமா பிடிக்காத நபர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு அரிசிரவை வைத்து அருமையான உப்புமா கொழுக்கட்டை செய்து கொடுத்து பாருங்கள். அதன் சுவையில் மெய் மறந்து மீண்டும் மீண்டும் என கேட்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கும். உப்புமா கொழுக்கட்டை செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டை நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய சிறிய துண்டு இஞ்சி மற்றும் ஒரு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வளர்க்க வேண்டும். இந்த நேரத்தில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் துருவிய ஒரு கேரட், ஊற வைத்த பச்சை பட்டாணி, ஒரு கப் முட்டைகோஸ் துருவல் சேர்த்து நன்கு எண்ணெயுடன் வதக்க வேண்டும். இப்பொழுது காய்கறிகள் வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

அதாவது மூன்று கப் தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கடாயில் புதிதாக துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்து வரும் பொழுது ஒரு கப் அரிசி ரவையை அதனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அரிசி ரவையை சிறிது சிறிதாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மொத்தமாக சேர்த்து கிளறும் பொழுது சில நேரங்களில் கட்டியாக மாற வாய்ப்புள்ளது.

ஒரு கப் அரிசி ரவைக்கு 3 கப் தண்ணீர் என்பது அளவு. இதில் காய்கறிகள் சேர்க்கவில்லை என்றால் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கலந்து கொடுத்து இந்த கலவையை மூடி போட்டு ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் கிடைக்கும் ஸ்பெஷல் கிழங்கு பொட்டலம்! ரெசிபி இதோ….

அதன் பின் அடுப்பை அணைத்து இந்த அரிசி உப்புமாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி நன்கு ஆற வைக்க வேண்டும். கைகள் சூடு தாங்கும் அளவிற்கு உப்புமா ஆறியதும் அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். உப்புமாவை உருண்டைகளாக பிடிக்கும் பொழுது அழுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அப்படி அழுத்தி உருண்டைகளாக பிடிக்கும் பட்சத்தில் மாவு உள்பக்கம் வேகாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி அனைத்து உப்புமாவையும் உருண்டைகளாக பிடித்து கிளி பாத்திரத்தில் மாற்றி வேக வைக்க வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
அதன் பின் ஐந்து நிமிடம் ஆற வைத்து பரிமாறினால் சுவையான உப்புமா கொழுக்கட்டை தயார்.

Exit mobile version