ஆந்திரா ஸ்பெஷல் சுரக்காய் அப்பலோ! அசத்தலான ரெசிபி இதோ!

சுரக்காய் வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என பல வகையான உணவு முறைகள் சமைத்தாலும் ஆந்திரா ஸ்பெஷல் சுரக்காய் அப்பலோ ஒருமுறையாவது நம் வீட்டில் சமைத்து பார்க்க வேண்டும். தட்டைப்போல வட்ட வடிவில் மிருதுவான சுவையில் அமைந்திருக்கும் இந்த அப்பலோ குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றாக மாறிவிடும். சுரக்காய் அப்பலோ செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

இதற்கு நன்கு இளம் பச்சை நிறத்தில் இருக்கும் சுரைக்காய் ஒன்றை தேர்ந்தெடுத்து அதனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோள்களை நீக்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி சுத்தம் செய்து சுரைக்காயை நன்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவி எடுத்த சுரைக்காயில் இருந்து தண்ணீர்களை பிழிந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது துருவிய சுரக்காயை ஒரு கப் அளவிற்கு எடுத்து ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். ஒரு கப் சுரக்காவிற்கு ஒரு கப் அளவு அரிசி மாவு என்ற பதத்தில் அரிசி மாவை அந்த பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள், ஒரு தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவு தயார் செய்யும் பொழுது தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை சுரைக்காயில் இருக்கும் தண்ணீரை போதுமானது. இறுதியாக ஒன்றரை மணி நேரம் ஊற வைத்த ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

கலந்து இந்த மாவை ஒரு பத்து நிமிடம் ஓரமாக வைத்துவிட வேண்டும். அந்த நேரத்தில் ஒரு கடாயில் பொருத்து எடுப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும். எண்ணெய் மிதமாக சூடானது நாம் கலந்து வைத்திருக்கும் சுரைக்காய் மாவை ஒரு கைப்பிடி அளவு அதிகமாக எடுத்து நன்கு உருண்டையாக உருட்டி நல்ல வட்ட வடிவில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கல்யாண வீட்டு பந்தி ஸ்பெஷல் தித்திக்கும் பைனாப்பிள் கேசரி!

இந்த மாவை உருண்டையாக தட்டும் பொழுது சிறிதளவு கையில் எண்ணெய் தடவி தட்டினால் நல்ல வட்ட வடிவில் அருமையாக வந்து விடும்..

இதை எண்ணெயுடன் சேர்த்து முன்னும் பின்னும் இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுரைக்காய் அப்பலோ தயார்.

Exit mobile version