கார்த்திகை தீபம் அன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி இருளை நீக்கி தெய்வீக வெளிச்சம் பெறுவதற்கான வழிபாடுகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழிபாட்டின் போது வீடுகளில் விளக்கு ஏற்றி இனிப்பு பலகாரம் செய்து கடவுளை வழிபடுவது வழக்கமான ஒன்று. இந்த முறை மிகவும் எளிமையாக மற்றும் சத்து நிறைந்த கோதுமை மாவு வைத்து அப்பம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
ஒரு அகலமான கடாயில் முக்கால் கப் வெல்லம் சேர்த்து அதற்கு ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கரைந்ததும் அதை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, அரை கப் தேங்காய் துருவல், ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் இரண்டு நன்கு பழுத்த வாழைப்பழங்களில் மிக்சியில் அரைத்து விழுதுகள் ஆக்கி சேர்த்து செய்து கொள்ளலாம். இப்பொழுது இந்த மாவுடன் கரைத்து வைத்திருக்கும் வெல்லப்பாகை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாவு தண்ணியாக இருக்கும் பட்சத்தில் அப்பம் அதிகபடியாக எண்ணெய்குடிக்கவும். அதனால் மாவு சற்று கெட்டியாக இருக்கும் விதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். அப்படி மாவு சிறிதளவு தண்ணியாக இருந்தால் இரண்டு தேக்கரண்டி ரவை சேர்த்துக் கொள்ளலாம்.
மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் வைத்து மிளகு ரசம் ரெசிபி!
இப்பொழுது இந்த மாவை குறைந்தது அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு பணியார கல்லை அடைப்பில் வைத்து சூடுபடுத்தி நெய் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் வரும் வரை மாவு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
இப்படி இன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை பணியாரம் தயார். இந்த கார்த்திகை தீபத்துக்கு தித்திப்பான கோதுமை அப்பம் செய்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்விக்கலாம்.