அட! பால் பணியாரம் இவ்வளவு சுவையா??? இத செய்து விநாயகர் சதுர்த்திக்கு அசத்திடலாம் வாங்க!

பால் பணியாரம் ஒரு பாரம்பரியமான இனிப்பு வகை. சில கிராமங்களில் மாப்பிள்ளை விருந்துக்கு பெண் வீட்டார் முதலில் பால் பணியாரம் செய்து கொடுத்து பிறகு தான் விருந்து படைப்பார்கள். இந்த பால் பணியாரம் மிக மிக சுவையான ஒரு இனிப்பு வகை. பணியாரம் அதிகம் பாலில் ஊறி குழைந்தும் போயிருக்கக் கூடாது சரியாக ஊறாமலும் இருக்கக் கூடாது. பணியாரம் கல்லாக இல்லாமல் வாயில் வைத்ததும் கரையும் படி சரியான அளவில் ஊறி இருக்கும் படி இதனை செய்ய வேண்டும். இதை செய்வதற்கு அதிகமான பொருட்கள் தேவையில்லை. செய்யும் பதத்தை அறிந்து கொண்டால் எளிமையாக செய்துவிடலாம்.

விநாயகர் சதுர்த்திக்கு அருமையான இந்த பால் கொழுக்கட்டை செய்து அனைவரையும் அசத்துங்க!

இந்த பால் பணியாரம் செய்வதற்கு முதலில் பணியாரத்தை தயார் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு கப் அளவு பச்சரிசி மற்றும் முக்கால் கப் அளவு உளுந்தம் பருப்பு இரண்டையும் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரிசியும் உளுந்தும் அரை மணி நேரம் ஊறிய பிறகு இதனை கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். குருணைகள் இல்லாமல் மை போல அரைக்கவும். குருணைகள் ஏதும் இருந்தால் பொறிக்கும் போது பணியாரம் வெடிக்கும் எனவே மைய அரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது பணியாரம் பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கெட்டியாக அரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாக கிள்ளி எண்ணெயோடு சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். பொறித்து எடுத்த பிறகு ஒரு லிட்டர் அளவு பாலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வற்ற காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

பாலோடு ஒரு கப் சர்க்கரை சிறிதளவு குங்குமப்பூ சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். பால் சூடாக இருக்கும் பொழுதே பொறித்து வைத்திருக்கும் பணியாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். பணியாரம் எல்லாவற்றையும் ஒன்றாக பாலில் போட்டால் அதிகமாக ஊறி கூலாகிவிடும். எனவே அவ்வபோது பாலில் போட்டு ஊற வைத்து பரிமாறலாம். இதே செய்முறையை தேங்காய் பால் வைத்தும் செய்யலாம் அதுவும் சுவையாக இருக்கும்.

விநாயகர் சதுர்த்திக்கு சுவையான பால் பாயாசம்…! வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்!

அவ்வளவுதான் சுவையான பால் பணியாரம் தயார். இதனை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து உண்டு மகிழலாம்..!

Exit mobile version