ஐந்தே நிமிடத்தில் கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு!

வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயங்களில் முட்டை மட்டும் இருக்கிறதா.. இந்த காரசாரமான முட்டை குழம்பு வைத்து காலை மாலை என இருவேளை சமையலையும் ஐந்தே நிமிடத்தில் முடித்து விடலாம். இந்த அருமையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த முட்டை குழம்பு செய்வதற்கு ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு பட்டை, ஏலக்காய் 2, இலவங்கம் இரண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன் பின் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் பொழுது இரண்டு பச்சை மிளகாய் நீளமாக கீறி வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கியதும் இதில் வேகவைத்த உருளைக்கிழங்கை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

இப்பொழுது இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் அரை தேக்கரண்டி கறி மசாலாத்தூள், தேக்கரண்டி குழம்பு மசாலா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மசாலா வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

இதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கடாயை பத்து முதல் 15 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை செல்லும் வரை குழம்பு கொதித்தால் போதுமானது.

கோடை காலத்திலும் சளி தொல்லையா? அருமையான வீட்டு மருந்து வெற்றிலை பூண்டு சாதம்…

15 நிமிடம் கழித்து நாம் அவிழ்த்து வைத்திருக்கும் முட்டையை நான்காக வகுந்து குழம்பில் சேர்த்து மிதமான தீயில் மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு தயார்.

இந்த முட்டை குழம்பு சூடான சாதம், தோசை, சப்பாத்தி, இட்லி, பூரி என அனைத்திற்கும் சிறந்த சைடிஷ் ஆக இருக்கும்.

Exit mobile version