மழை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லையை நொடியில் சரி செய்யும் வெற்றிலை சாதம்!

கொளுத்தும் வெயில் தற்பொழுது படிப்படியாக குறைந்து அடுத்தடுத்து மழை வர துவங்கியுள்ளது. திடீரென ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பலருக்கு தடுமல், ஜலதோஷம், சளி, அஜீரண கோளாறு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு எளிதில் சளி பிடித்து விடும். சளி பிடித்த பிறகு குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பது சாப்பிட்டால் உடனடியாக வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இது போன்ற தொல்லைகளில் இருந்து எளிமையாக விடுபடும் பட்சத்தில் சளிக்கு ஏற்ற அருமருந்தான வெற்றிலை வைத்து அருமையான சாதம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

ஒரு மிக்ஸி ஜாரில் வெத்தலைகளை இரண்டாக கீரி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், பெரிய நெல்லிக்காய் அளவு ஊறவைத்த புளி, தேக்கரண்டி மிளகு, 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அழைக்கும் பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் புளி ஊறவைத்த தண்ணீரை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும். இதில் கைப்பிடி அளவு வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

மீதம் இருக்கும் அதை எண்ணெயில் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கோடியாக நறுக்கிய 10 முதல் 15 சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்தில் வதங்கி பொன்னிறமாக வரும் நேரத்தில் நாம் மிக்சி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் வெற்றிலை விழுதுகளை சேர்த்துக்கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷலான ஸ்வீட் ரெசிபி! இனி கடை பலகாரங்களுக்கு பாய் பாய் தான்…

மிதமான தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடம் கெட்டி பதத்திற்கு வரும் வரை நன்கு கிளற வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் தொக்கு தயாராக மாறி உள்ளது. இந்த நேரத்தில் ஒரு கப் சாதம் மற்றும் நாம் முதலில் வருத்த வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்து கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெற்றிலை சாதம் தயார்.

இந்த சாதத்தை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் பொழுது பசியின்மை சளி போன்ற தொல்லைகள் நீங்கி சுறுசுறுப்பாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பார்கள்.

Exit mobile version