வெண்டைக்காயா… வளவள கொல கொலன்னு இருக்கும் வேணாம் அப்படின்னு சொல்றவங்களுக்கு தான் இந்த ரெசிபி!

வெண்டைக்காய் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று. மேலும் இந்த வெண்டைக்காய் வைத்து மிக எளிமையாகவும் பலவிதமான முறையில் சமைத்து விடலாம். ஆனால் இதில் இருக்கும் வளவளப்பு தன்மையின் காரணமாக சிலர் இதை விரும்பி சாப்பிடுவது இல்லை. சமைத்த பின் இருக்கும் அந்த வளவளப்பு சாப்பிடும் பொழுது சிலருக்கு விரும்பாத சுவையை கொடுத்து விடுகிறது. இதனால் வெண்டைக்காய் வேணாம் என ஒதுக்குபவர்களுக்கு இந்த ரெசிபியை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள் மீண்டும் இதே கிரேவி வேண்டும் என அடம் பிடிக்கும் அளவிற்கு சுவை அருமையாக இருக்கும்.

இந்த ரெசிபி செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் முக்கால் கப் கெட்டி தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி கடலை மாவு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், முக்கால் தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையில் கடலை மாவு சேர்த்து மசாலா பொருட்கள் சேர்க்கும் பொழுது தான் தயிர் தனியாக பிரிந்து வராமல் ஒரு சேர கிளற முடியும்.

இந்த வெண்டைக்காய் கிரேவி செய்வதற்கு வெண்டைக்காயை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அதாவது குச்சி குச்சியாக துண்டுகள் போல் வெட்டி எடுக்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்டைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து நன்கு வதக்க வேண்டும்.

எண்ணெய் சேர்க்காமல் வெண்டைக்காய் மட்டும் சேர்த்து வதக்கினால் வெண்டைக்காயிலிருந்து வளவளப்பு தன்மை நீங்கி சமைத்த பின் ருசியாக இருக்கும்.

நன்கு பொன்னிறமாக வழங்கிய வெண்டக்காவை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றிவிடலாம். மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் தயவுடன் சேர்த்து வைத்திருக்கும் மசாலா கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கலவையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இதனுடன் நாம் எண்ணையில் பொன்னிறமாக வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.

வாரத்தில் ஒருமுறை சிக்கன் செய்தாலும் வாரம் முழுக்க சுவை நாவிலே நடனமாடும் திருவனந்தபுரம் சிக்கன் ரெசிபி!

கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் வெண்டைக்காய் கிரேவி இப்போது தயாராக மாறிவிட்டது. இந்த கிரேவியை நம் சாதம், சப்பாத்தி, தோசை, இடியாப்பம், ஆப்பம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது முட்டை அல்லது அப்பளம் வைத்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த கிரேவியில் வெண்டைக்காய் குச்சி போல நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் நன்கு வதக்கி சமைப்பதனால் அதில் எந்த வளவளப்பு தன்மையும் இல்லாமல் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்.

Exit mobile version