உடல் எடை குறைத்தல், சிறுநீரக கல் பிரச்சினை சரி செய்தல் என பல மருத்துவ பயன்கள் கொண்ட வாழைத்தண்டு வைத்து அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

எளிமையாக கிடைக்கும் இந்த வாழைத்தண்டில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லடைப்பு பிரச்சனையை சரி செய்ய வாரத்தின் மூன்று அல்லது நான்கு முறையாக வாழைத்தண்டு உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு வாழைத்தண்டு உணவாக பிடிப்பது இல்லை. அந்த நேரங்களில் வாழைத்தண்டு வைத்து அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி சாதம் ஒன்று செய்து கொடுத்து குழந்தைகளை சாப்பிட வைக்கலாம் வாங்க… இந்த வாழைத்தண்டு சாதம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

வாழைத்தண்டு சாதம் செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் அரிசிக்கு அரை டம்ளர் பாசிப்பருப்பு என்ற விதத்தில் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊற வைக்க வேண்டும். அதேபோல் வாழைத்தண்டுவை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோர் அல்லது அரிசி களைந்த தண்ணீரில் சேர்த்து வைக்க வேண்டும். இல்லை என்றால் வாழைத்தண்டுவின் நிறம் மாறிவிடும்.

ஒரு குக்கரின் மூன்று தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பழுத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கியதும் நாம் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வைத்திருக்கும் வாழைத்தண்டு இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

மழைக்காலங்களில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கண்டிப்பாக வைக்க வேண்டிய தூதுவளை ரசம்!

வாழைத்தண்டு சேர்த்தவுடன் அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அதன் பின் நம் ஊற வைத்திருக்கும் அரிசி பருப்புவை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடி விட வேண்டும்.

மூன்று முதல் நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான வாழை தண்டு சாதம் தயார். இந்த சாதத்தை நாம் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் நபர்களுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாகவும் கொடுத்து விடலாம். இந்த சாதத்துடன் உருளைக்கிழங்கு மசாலா, அப்பளம் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version