ஒரே பிசிபேல்லா பாத் பாக்ஸ் சாப்பிட்டு முகம் சுளிக்கும் நேரத்தில் வாங்க ஒரு முறையாவது வாஹி பாத் ட்ரை பண்ணலாம்!

எப்போதும் குழம்பு காய், பொரியல் என வைத்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக சூடாக சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் பெரும்பாலும் பிசிபேல்லா பாத் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனாலும் ஒரே அந்த ரெசிபியை சாப்பிட்டு முகம் சுளிக்கும் நேரங்களில் ஒரு முறையாவது வித்தியாசமாக சாப்பிட வேண்டும் ஆனால் அது அதிக மசாலாக்கள் இல்லாமல் சுவையானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வா அதஹி பாத் ஒருமுறை ட்ரை பண்ணி பார்க்கலாம். சுவையான மற்றும் சத்தம் நிறைந்த வாஹி பாத் ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ…

இந்த வாஹி பாத் செய்வதற்கு முதலில் மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி தனியா சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இரண்டு கிராம்பு, இரண்டு பட்டை, காய்ந்த வத்தல் 2, ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்து ஓரமாக வைத்துவிட வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கைப்பிடி அளவு வேர்க்கடலை, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நீளவாக்கில் நறுக்கிய ஐந்து கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.

மதுரை மல்லிகை பூ மாதிரி காஞ்சிபுரத்தில் கிடைக்கும் கோவில் இட்லியும் தனி ஸ்பெஷல் தான்! அருமையான பந்து போல காஞ்சிபுரம் கோவில் இட்லி செய்வதற்கான ரெசிபி இதோ!

இந்த நேரத்தில் நாம் வறுத்து வைத்திருக்கும் மசாலாவை நன்கு பொடி செய்து கொள்ளலாம். இந்த மசாலா கலவையை இரண்டு தேக்கரண்டி கடாயில் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கிளற வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது தொக்கு தயாராக உள்ளது இதில் வடித்து ஆற வைத்த சாதத்தை சேர்த்து கிளறினால் வாஹி பாத் தயார். குறைவான மசாலா சேர்த்து சுவையான சாதம் தயார். இதில் அப்பளம் அல்லது பிடித்தமான காய்கறிகள் வைத்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும்.

Exit mobile version