உப்புமா என்றாலே பெரும்பாலான வீடுகளில் ரவை அல்லது சேமியா வைத்து செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எப்போதும் அதே போல உப்புமா செய்வதால் சில நேரங்களில் சரிப்பை ஏற்படுத்தும். அப்படி முகம் சுளிக்கும் நேரங்களில் சற்று வித்தியாசமான மற்றும் ஈஸியான உப்புமாக்களை செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறை சிறு தானியம் வைத்து அருமையான உப்புமா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த ரெசிபியில் சிறுதானியமான வெள்ளை சோளம் வைத்து எளிமையான முறையில் உப்புமா செய்வதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளோம். வாங்க ஒருமுறை இந்த உப்புமா ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணலாம்.
ஒரு கப் வெள்ளைச் சோளத்தை முந்தைய நாள் இரவு ஊற வைத்து கொள்ள வேண்டும். வெள்ளைச் சோளம் குறைந்தது 8 முதல் 10 நிமிடம் நன்கு தண்ணீரில் ஊற வேண்டும். பத்து மணி நேரம் கழித்து வெள்ளை சோளத்தை மீண்டும் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும்.
மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று விசில்கள் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம். விசில் வந்து குக்கரின் அழுத்தம் குறைந்ததும் வெள்ளைச்சோளத்தை தண்ணீரிலிருந்து தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்து இதில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
எப்போதும் சோயா, மஸ்ரூமில் பிரியாணி செய்து சலித்தவர்கள் ஒரு முறை கத்தரிக்காய் பிரியாணி ட்ரை பண்ணுங்க…
இந்த நேரத்தில் நாம் வேகவைத்து வடிகட்டி வைத்திருக்கும் சோளத்தை கடாயில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்பொழுது அரை கப் தேங்காய் துருவல் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். மீண்டும் ஒருமுறை நன்கு கிளறி இறக்கினால் சுவையான வெள்ளை சோள உப்புமா தயார். இந்த உப்புமாவுடன் காரம் சற்று தூக்கலான தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.