பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருப்பதற்கு உளுந்து ஒரு அருமருந்தாக பார்க்கப்படுகிறது. உளுந்து நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் பொழுது இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும். வாங்க ஊட்டச்சத்து நிறைந்த உளுந்து வைத்து அருமையான புட்டு ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் ஒரு கப் அளவிற்கு உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளலாம். உளுந்துவின் நிறம் லேசாக மாறும் பொழுது அடுப்பை அணைத்து அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு கப் உளுந்து இருக்கு அரை கப் வீதம் பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதையும் அதே கடாயில் சேர்த்து நன்கு பொறிந்து வரும் வரை வறுத்துக் கொள்ளலாம். இப்பொழுது நாம் வறுத்த இரண்டு பொருட்களையும் சிறிது நேரம் சூடு ஆற வைக்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக மையாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளலாம். இப்பொழுது புட்டு செய்வதற்கு மாவு தயாராக உள்ளது.
இந்த மாவில் தண்ணீரை லேசாக தெளித்து தெளித்து மாவு பிசைய வேண்டும். இதனுடன் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் கலந்து புட்டு பதத்திற்கு மாவை பிரட்டி கொள்ள வேண்டும்.இப்பொழுது மாவை ஒருமுறை பிடித்து பார்க்கும் பொழுது கொழுக்கட்டை போல கெட்டியாக பிடிபட வேண்டும் அப்பொழுதுதான் புட்டு செய்வதற்கு சரியான பக்குவத்தில் தயாராக உள்ளது.
குஷ்பூ இட்லிக்கு சைடிஷ் ஆக… நடிகை குஷ்புவிற்கு பிடித்த சுட்ட கத்திரிக்காய் சட்னி!
இந்த மாவுடன் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து இட்லி பாத்திரத்தில் நம் விருப்பத்திற்கு ஏற்ப வைத்து வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் பத்து நிமிடம் நன்கு புட்டு வெந்து வரவேண்டும். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப நாட்டுச்சக்கரை அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.
உளுந்து வைத்து இந்த புட்டு செய்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பது மட்டுமின்றி சாப்பிடுவதற்கும் சுவை சிறப்பாக இருக்கும்.