டேஸ்டியான தக்காளி தொக்கு!!! இத செஞ்சு வச்சுட்டா போதும் சைட் டிஷ்க்கு பஞ்சமே இருக்காது!

தக்காளி தொக்கு என்பது தக்காளியை வைத்து ஊறுகாய் போல செய்யக்கூடிய ஒரு வகை ரெசிபி ஆகும். இந்த தக்காளி தொக்கு இட்லி தோசை சப்பாத்தி என சைட் டிஷ் ஆகவும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம். இப்பொழுது இந்த தக்காளி தொக்கு எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தக்காளி தொக்கு செய்ய ஒரு கிலோ அளவு நாட்டுத்தக்காளிகளை கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். 50 கிராம் அளவு பூண்டை உரித்து அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 250 மில்லி லிட்டர் அளவு எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பிறகு பொடி செய்து வைத்த பூண்டை சேர்த்து வதக்க வேண்டும் பிறகு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

அடடே! எச்சில் ஊறச் செய்யும் எலுமிச்சை ஊறுகாய்.. அனைத்து சாதத்திற்கும் இது ஒன்று போதும்!

தக்காளியை வதக்கும் பொழுது தண்ணீர் விடும். அந்த தக்காளியை நன்கு சுருளும் வரை வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் பொழுது 40 கிராம் அளவு மிளகாய் பொடியை சேர்க்க வேண்டும். தக்காளி வெந்து கெட்டியாக வரும் பொழுது ஒரு எலுமிச்சை அளவு புளியை கரைத்து இதில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். சுருண்டு கெட்டியாக வரும் பொழுது ஒன்றரை ஸ்பூன் அளவு வெந்தயத்தை வறுத்து பொடி செய்து அந்த வெந்தய பொடியை இதில் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நன்கு கிளறி இறக்கி விடலாம் இறுதியாக இரண்டு ஸ்பூன் அளவு வினிகரை சூடு செய்து வினிகர் ஆறியதும் இறக்கிய தக்காளி தொக்கில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இந்த தொக்கு 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம். அவ்வளவுதான் சுவை நிறைந்த தக்காளி தொக்கு அல்லது தக்காளி ஊறுகாய் தயார்!

Exit mobile version