உதிரி உதிரியான பிரியாணியின் அதே சுவையில் தக்காளி சாதம்! ரசத்திலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

வீட்டில் பெரிதாக காய்கறிகள் இல்லாத சமயங்களில் தக்காளி வெங்காயம் மட்டுமே வைத்து சுவையான தக்காளி சாதம் செய்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான மதிய உணவு செய்து கொடுக்கலாம். பிரியாணி சுவையில் தக்காளி சாதம் வீட்டில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் பட்டை ஒன்று, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பிரியாணி இலை இரண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் காரத்திற்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு பச்சை மிளகாய், ஒரு கப் புதினா, ஒரு கப் கொத்தமல்லி சேர்த்து வெங்காயத்துடன் வதக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இஞ்சி, பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் மூன்று முதல் நான்கு நல்ல பழுத்த தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி பழம் நன்கு குலைந்து வரும் அளவிற்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து எண்ணெயுடன் நன்கு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

கடினமான சமையலை எளிமையாகவும், சுவையானதாகவும் மற்றும் சத்து நிறைந்ததாகவும் மாற்றும் சமையலறை டிப்ஸ்….

அடுத்ததாக ஒரு கப் கெட்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடி விட வேண்டும். மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான தக்காளி சாதம் தயார்.

Exit mobile version