லஞ்ச் பாக்ஸ்க்கு தக்காளி சாதம் தான் வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு ஒருமுறை வறுத்து அரைத்த கர்நாடகா ஸ்டைல் தக்காளி சாதம் ட்ரை பண்ணுங்க…

பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் இருக்கு தினமும் வித்தியாசமான சாதம் வகைகள் கொடுத்து விட வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கனவாக இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் பிரியாணியின் சுவையிலேயே இருக்கும் தக்காளி சாதம் மிகவும் பிடிக்கும். தினமும் கொடுத்தால் கூட தக்காளி சாதத்தை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு முறையாவது வறுத்து அரைத்து கர்நாடகா முறைப்படி தக்காளி சாதத்தை செய்து கொடுத்து பாருங்கள். வித்தியாசமான இந்த சுவை குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி விடும். இந்த வறுத்து அரைத்த தக்காளி சாதம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த வறுத்தரைத்த கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் காரத்திற்கு ஏற்ப எட்டு முதல் 10 காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து எண்ணெயில் நன்கு பொரிய வதக்க வேண்டும்.

அடுத்ததாக நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை நான்காக கீரி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மசிந்ததும் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிளறி கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம்.

கடாயில் வதக்கிய இந்த பொருட்கள் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு அண்ணாச்சி பூ, இரண்டு துண்டு பட்டை, ஒரு ஏலக்காய் , பத்து முந்திரிப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் லேசாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நீளவாக்கில் லேசாக நறுக்கிய 4 தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும். ஒரு நிமிடம் வரை மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும் அடுத்ததாக ஒரு கப் அரிசிக்கு 2 கப் வீதம் தண்ணீர் சேர்த்து முதலில் தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

உடல் எடை குறைக்க ஆசைதான்… ஆனால் கொள்ளு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இதுபோல கொள்ளு வாசமே இல்லாத கொள்ளு குழம்பு செய்வதற்கான ரெசிபி இதோ…

தண்ணீர் நன்கு கொதி வந்ததும் நாம் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஊற வைத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி அளவு, ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை பொடி பொடியாக நறுக்கியது, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை முடிவிட வேண்டும்.

மூன்று விசில்கள் வைத்து இறக்கினால் சுவையான கர்நாடகா ஸ்டைல் தக்காளி சாதம் தயார். பிரியாணி போன்ற மணக்க மணக்க அதை வாசத்தில் எளிமையான தக்காளி சாதம்.

Exit mobile version