வீட்டில் சில சமயங்களில் காய்கறிகள் பெரிதாக இல்லாத நேரங்களில் என்ன குழம்பு சமைப்பது என்பது குழப்பங்களில் ஒன்றாக இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் தோசை மற்றும் சப்பாத்திக்கு குருமா செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் இதற்கு கேரட், உருளைக்கிழங்கு. காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, பீன்ஸ் என பல காய்கறிகள் சேர்த்தால் தான் சுவை அருமையாக இருக்கும். இப்படி எந்த காய்கறிகளும் இல்லாமல் தக்காளி ஒன்றை பயன்படுத்தி தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற அருமையான சைடிஷ் குருமா செய்யலாம் வாங்க. இந்த தக்காளி குருமா செய்வதற்கான ரெசிபியை இந்த சுகத்தில் பார்க்கலாம்..
இந்த தக்காளி குருமா செய்வதற்கு முதலில் மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரின் பட்டை இரண்டு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் ஒன்று, கல்பாசி சிறிதளவு, ஒரு தேக்கரண்டி பொரிகடலை, ஒரு தேக்கரண்டி கசகசா, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், கைப்பிடி அளவு முந்திரி, இரண்டு சில்லு தேங்காய் துண்டுகள் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்களை ஒன்றாக அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து இரண்டு பிரியாணி இலை, இரண்டு துண்டு பட்டை, ஒரு ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கறிவேப்பிலை இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி கறி மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாவுடன் தேங்காய் விழுதுகள் ஒரு சேர கலந்து கொடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கடாய் மூடிவிட வேண்டும்.
கர்நாடகா ஸ்டைல் காரசாரமான அசத்தலான மங்களூர் இறால் வறுவல்!
மிதமான தீயில் மசாலாக்கள் கொதித்து பச்சை வாசனை சென்றவுடன் நறுக்கி வைத்திருக்கும் 3 தக்காளிகளை சேர்த்துக் கொள்ளலாம். நாம் சேர்க்கும் காளிகள் நன்கு பழுத்து நாட்டு தக்காளிகளை பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும்.
தக்காளி சேர்த்த பிறகு மீண்டும் ஒரு முறை கலந்து கொடுத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து தக்காளி நன்கு வந்து மசிந்திருப்பதை பார்த்த பிறகு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான தக்காளி குருமா தயார்.
இந்த தக்காளி குருமா சூடான இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றிற்கு சரியான பொருத்தமாக இருக்கும். வீட்டில் பெரிதாக காய்கறிகள் இல்லாத சமயங்களில் இந்த தக்காளி குருமா வைத்து அனைவரையும் அசத்தலாம்.