ரோட்டு ஓர தள்ளு வண்டி கடையில் விற்பனையாகும் கண்ணை பறிக்கும் காரச்சட்னி!

பொதுவாக இட்லி, தோசைக்கு நாம் வைக்கும் சைடிஷ்சை பொறுத்து தான் சாப்பிடும் அளவும் வேறுபடும். அதாவது இட்லி மற்றும் தோசைக்கு காரசாரமாக சட்னிகள் செய்யும் பொழுது இரண்டு தோசை சாப்பிடும் குழந்தைகள் கூட நான்கு அல்லது ஐந்து என அதிகமாக சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் காரசாரம் இல்லாமல் சுவை குறைவாக சட்னி செய்யும் பொழுது அதை சாப்பிடும் அளவு குறைந்துவிடும். ஆனால் ரோட்டோர தள்ளுவண்டி கடைகளில் கொடுக்கும் காரசாரமான சுவையில் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளி சட்னியின் சுவை தனிதான். இந்த சட்னியை வைத்து சாப்பிடும் பொழுது இட்லி கணக்கே இல்லாமல் செல்லும். இந்த தள்ளுவண்டி காரச்சட்னி நம் வீட்டில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு காஷ்மீர் காய்ந்த வத்தல் , காரத்திற்கு ஏற்ப சாதாரண காய்ந்த வத்தல் இரண்டு அல்லது ஐந்து சேர்த்துக் கொள்ளலாம். காஷ்மீரி காய்ந்த பத்தல் பயன்படுத்தும் பொழுது காரம் கம்மியாகவும் நிறம் சற்று தூக்கலாகவும் இருக்கும்.

வறுத்த இந்த பொருட்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக அதை கடாயில் 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனுடன் பெரிதாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வழங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி பாதி வதங்கியதும் சிறிய எலுமிச்சை பழ அளவு புளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இனிப்பு, புளிப்பு, கசப்பு என அனைத்து விதமான சுவையும் நாவில் நர்த்தனம் ஆட வைக்கும் நாகர்கோவில் ஸ்பெஷல் நார்த்தங்காய் பச்சடி!

இப்பொழுது மிக்ஸி ஜாரில் நாம் முதலில் வருத்த உளுந்து மற்றும் காய்ந்த வத்தல் சேர்த்து அரைக்க வேண்டும். அதனுடன் அடுத்ததாக நாம் இறுதியாக வதக்கி வைத்திருக்கும் கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான காரசாரமான ரோட்டு கடை தக்காளி சட்னி தயார்.

இந்த சட்னிக்கு ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கிளறினால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த சட்னியை கெட்டியாக வைத்து சாப்பிடலாம் தேவைப்பட்டால் அதிகமாக தண்ணீர் கலந்து தண்ணீர் சட்னியாகவும் சாப்பிடலாம்.

Exit mobile version