உங்கள் பிரஷர் குக்கர் பழுதாகாமல் நீண்ட நாட்களுக்கு பராமரிக்க அருமையான டிப்ஸ்…!

பிரஷர் குக்கர் அனைவரின் வீட்டு சமையலறையிலும் மிக முக்கிய இடத்தை பிடித்து விட்டது. சமையலை எளிமையாகவும் வேகமாகவும் செய்ய உதவி செய்வதோடு கேஸை மிச்சப்படுத்தவும் இந்த பிரஷர் குக்கர் பெரிய அளவில் உதவி புரிகிறது. இந்த பிரஷர் குக்கர் வாங்கிய பொழுது நன்றாக வேலை செய்தாலும் சிலரது இல்லங்களில் சில நாட்களிலேயே எவ்வளவு நேரம் ஆனாலும் விசில் வராமல் இருப்பது, குக்கரின் விசில் வழியே உள்ளே வைத்த தண்ணீர் வெளியே சிதறி அடிப்பது என பிரஷர் குக்கர் ஒழுங்காக வேலை செய்யாது. இதற்கு காரணம் பிரஷர் குக்கரை ஒழுங்காக பராமரிக்காதது தான். பிரஷர் குக்கரை முறையாக பராமரித்தால் அது நீண்ட நாட்களுக்கு புதிது போலவே வேலை செய்யும்.

உங்கள் கேஸ் ஸ்டவ்வை இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பராமரித்து பாருங்கள்.. என்றும் புதிதாய் இருக்கும்!

வாருங்கள் பிரஷர் குக்கரை பராமரிக்க என்னென்ன டிப்ஸ் பின்பற்ற வேண்டும் என்பதை பார்ப்போம்:

ஒவ்வொரு முறை சமையல் முடிந்ததும் பிரஷர் குக்கரில் மூடி, விசில், கேஸ்கட் என அனைத்தையும் தனித்தனியாக கழற்றி நன்கு சுத்தம் செய்த வேண்டும். கேஸ் கட்டையும் விசிலையும் குக்கரின் மூடி உடனே வைத்து கழுவி அதை மீண்டும் அப்படியே பயன்படுத்தக் கூடாது.

விசில் மாட்டும் இடத்தில் ஏதேனும் அடைப்புகள் இருக்கிறதா? என தண்ணீர் விட்டு சோதித்துக் கொள்ள வேண்டும். பிரஷர் குக்கரில் மூடியில் விசில் மாட்டும் பகுதியை தண்ணீரில் நேராக காண்பிக்கும் பொழுது தண்ணீர் தடையின்றி வந்தால் அடைப்பு ஏதும் இல்லை. மாறாக சொட்டு சொட்டாக வந்தாலோ இல்லை தண்ணீர் வடியாமல் இருந்தாலோ அதில் அடைப்பு இருக்கிறது. அதை அவ்வபோது சுத்தம் செய்து விடுங்கள்.

கேஸ்கட் அளவு மாறாமல் அதே அளவில் இருந்தால்தான் குக்கர் நன்கு வேலை செய்யும். சில நேரம் மூடியுடனேயே கேஸ்கட்டை வைக்கும் பொழுது இறுகி போய்விடும். கேஸ்கட்டை தூய்மை செய்த பிறகு சிறிது நேரம் தண்ணீரிலோ அல்லது ரெஃப்ரிஜிரேட்டர் உள்ளேயோ வைத்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

குக்கரில் ஒரு பொருளை வேக வைக்க தண்ணீர் ஊற்றும் பொழுது சரியான அளவில் உற்ற வேண்டும். குக்கர் முழுவதும் தண்ணீரால் நிரப்பி விடக் கூடாது. கூடுமானவரை குக்கரின் பாதி அளவிற்கு மேல் தண்ணீர் இல்லாதபடி பார்த்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தண்ணீர் வெளியே வராமல் குக்கரின் மூடி பகுதிகளில் எதுவும் சிதறடிக்கப்படாமல் இருக்கும்.

குழம்பு வகைகளை குக்கரில் வைத்து மூடும் பொழுது அதன் மேல் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து பிறகு குக்கரை மூடினால் குழம்பு வெளியே பொங்கி வராது.

எப்பொழுதும் குக்கரின் மூடியை மூடிவிட்டு மூடி வழியாக ஆவி வெளியேறிய பிறகு விசிலை போடவும். குக்கரை மூடியை விசில் மாட்டியபடியே போட்டு மூடக்கூடாது.

அதேபோல குக்கரில் பிரஷர் முழுவதும் வெளியான பிறகு திறக்க வேண்டும். நம்முடைய அவசரத்திற்காக பிரஷர் ரிலீஸ் ஆகாமலேயே குக்கரை திறப்பது கூடாது.

குக்கரின் அடிப்பகுதியை கூடுமானவரை மென்மையான ஸ்கரப் கொண்டு மெதுவாக தேய்த்து சுத்தப்படுத்துங்கள். குக்கர் அடிக்கடி அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

Exit mobile version