சூப்பரான தாவூத் ஸ்டைல் சிக்கன் ரெசிபி!

சிக்கன் வைத்து எவ்வளவு விதவிதமான ரெசிபிகள் செய்திருந்தாலும் தாவூத் ஸ்டைல் சிக்கன் ரெசிபிக்கு தனி மவுசுதான். ஒருமுறை யாவது இந்த ரெசிபியை நம் வீட்டில் கட்டாயமாக செய்து பார்க்க வேண்டும். காரசாரமான தாவூத் ஸ்டைல் சிக்கன் ரெசிபி செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ….

இந்த சிக்கன் செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி மல்லி, காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அரை கிலோ சிக்கனை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து அதில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி சீரகப்பொடி, கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து மீண்டும் ஒருமுறை கலந்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து கடாயில் ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பட்டர் நன்கு உருகியதும் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

விசேஷ நாட்களில் வீட்டில் செய்யும் கந்தரப்பம்! ரெசிபி இதோ!

சிக்கனை பட்டருடன் சேர்த்து நன்கு வதக்கி ஒரு பத்து நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். சிக்கன் வேகுவதற்கு என தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை 10 நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது சிக்கனிலிருந்து தண்ணீர் வெளியே வந்திருக்கும்.

இப்பொழுது நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை கடாயில் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். அடுத்த பத்து நிமிடம் கழித்து சிக்கன் வெந்துள்ளதா என சரி பார்த்து இறுதியாக கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தாவூத் சிக்கன் தயார்.

Exit mobile version