மசாலா எதுவும் சேர்க்காமல் எளிமையான முறையில் காய்கறிகள் வைத்து தக்காளி கடையல் ரெசிபி!

பொதுவாக பழங்காலத்து சமையலின் போது அதிகப்படியான மசாலாக்கள் சேர்க்காமல் எளிமையான முறையில் எளிதில் ஜீரணம் ஆகும் உணவு முறைகளை சமைத்து வந்துள்ளனர். அதே படி இந்த முறை சுரக்காய் வைத்து அருமையான தக்காளி கடைசல் செய்வதற்கான ரெசிபியை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். மேலும் இந்த ரெசிபியை பொதுவாக மசாலாக்கள் ஏதும் அதிகமாக சேர்க்காமல் சுலபமாக செய்யக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.

ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு பச்சை மிளகாய், 10 முதல் 12 வெள்ளை பூண்டு, 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பாதியாக வதங்கியதும் நன்கு பழுத்த நான்கு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி பாதியாக மசிந்து வரும் நேரத்தில் ஒரு கப் பீர்க்கங்காய் பொடியாக நறுக்கியது சேர்த்துக் கொள்ளலாம். பீர்க்கங்காய் கிடைக்காத பட்சத்தில் ஒரு கப் கத்திரிக்காய் கூட சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது காய்கறிகளை நன்கு எண்ணெயோடு வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, உப்பு அரை தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை கலந்து கொடுத்து மீண்டும் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

இட்லி, தோசையில் தொடங்கி பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் பொருந்தும் ரோட்டு கடை தண்ணி குருமா!

இப்படி குறைந்தது 10 முதல் 15 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நன்கு வெந்து இருப்பதை உறுதி செய்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக கடையில் சிறிது சூடு ஆரியதும் மத்து வைத்து நன்கு கடைந்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் அல்லது கத்திரிக்காய் சேர்த்த தக்காளி கடையல் தயார். சூடான சாதத்தில் குழம்பு இல்லாமல் இது போல சேர்த்து அப்பளம் வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு திருப்தியாக இருக்கும்.

Exit mobile version